கூட்டணியில் இருக்கும் போது நாங்க நல்லவங்க.. இப்ப கெட்டவங்களா? அண்ணாமலைக்கு இபிஎஸ் சுளீர்!

Author: Udayachandran RadhaKrishnan
25 August 2024, 5:39 pm

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அப்போது திமுக அரசால் அதிமுக நிர்வாகிகள் மீது போடப்படும் பொய் வழக்குகளை எதிர்கொள்வது தொடர்பாக இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, சென்னையில் நடைபெறவுள்ள கார் பந்தயம் நாட்டிற்கு ரொம்ப முக்கியம். சுய விளம்பரத்திற்காக இந்த கார் பந்தயம் நடத்துகின்றனர்.

மக்கள் அதிகமாக நடமாடக்கூடிய பகுதியில் கார் பந்தயம் நடத்துகின்றார்கள். இருங்காட்டு கோட்டையில் ஏற்கனவே மைதானம் உள்ளது அங்கு நடத்தலாமே என விமர்சித்தார்.

இதனை தொடர்ந்து திமுக- பாஜக கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தார்.
வெளியில் திமுகவும் பாஜகும் எதிரி போல் தோற்றமளிக்கிறார்கள் ஆனால் உள்ளே உறவு வைத்துள்ளார்கள்.

திமுக அரசு மீது ஆளுநரிடம் மூன்று முறை பாஜக தலைவர்கள் ஊழல் பட்டியல் கொடுத்தார்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழகத்தை பொறுத்தவரை பாராளுமன்ற தேர்தலுக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கும் மக்கள் வெவ்வேறு விதமாக வாக்களிக்கின்றனர்.

சட்டமன்ற தேர்தலில் அதிமுக வரவேண்டும் என்று ஏற்கனவே பலமுறை வாக்களித்துள்ளனர் என தெரிவித்தார். நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் அதிமுகவுடன் கூட்டணி வருமா என்பது தேர்தல் நேரத்தில் தான் முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.

அதிமுகவை அண்ணாமலை தொடர்ந்து விமர்சிப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கையில், அண்ணாமலைக்கு தொலைக்காட்சி மைக்கை கண்டால் பேசும் வியாதி உள்ளது.

விமானத்தில் ஏறும் போது ஒரு மாதிரியாகவும், இறங்கும்போது ஒரு மாதிரி பேசுபவர். ஏதோ ஒரு வகையில் தலைவர் பதவி பெற்றுவிட்டார். இப்போது தலைகால் புரியாமல் ஆடிக் கொண்டிருக்கிறார் என கடுமையாக விமர்சித்தார்.

அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் மாநில பிரச்சினைக்கு குரல் கொடுக்கிறோம். அண்ணாமலையின் எண்ணம் தன்னை முன்னிலைப்படுத்தி விளம்பரப்படுத்துவது தான் என தெரிவித்தார்.

அதிமுக ஊழல் ஆட்சி மோசமான ஆட்சி என்றெல்லாம் பாஜக தலைவர் குறிப்பிட்டுள்ளார். அதிமுகவுடன் இணைந்து கூட்டணியில் போட்டியிட்ட போதெல்லாம் தெரியவில்லை. அதிமுக ஆதரவுடன் பல்வேறு மசோதாக்கள் ம்த்தியில் நிறைவேற்றிய போதெல்லாம் தெரியவில்லையா என கேள்வி எழுப்பினார்.

இங்கு உள்ள மத்திய அமைச்சர் தமிழகத்திற்கு என்ன திட்டத்தை கொண்டு வந்தார். எந்த அளவுக்கு பொய் பேச முடியுமோ அந்த அளவுக்கு பேசுபவர் தான் பாஜக தலைவர். பாஜக ஆட்சிக்கு வந்த 2014ஆம் ஆண்டில் 55 லட்சம் கோடி கடன் இருந்தது.

இப்போது 168 லட்சம் கோடி கடன் உள்ளது. என்ன திட்டத்தை கொண்டு வந்தனர் இவ்வளவு கடன் உள்ளது என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 328

    0

    0