‘ஹாய்.. ஹவ் ஆர் யூ’.. பேருந்தை வழிமறித்த காட்டு யானை.. பீதியில் உறைந்த பயணிகள்..!

Author: Vignesh
26 August 2024, 10:24 am

வால்பாறை சாலக்குடி சாலையில் பேருந்தை வழிமறித்த காட்டு யானை இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் சமீப காலமாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது இந்நிலையில் வால்பாறை எடுத்துள்ள மளுக்க பாறை பகுதியில் இருந்து கேரள மாநிலம் சாலக்குடிக்கு பேருந்து சென்றது பேருந்தில் சுமார் 25க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

அதிரப்பள்ளி சாலையில் ஒற்றை காட்டு யானை நின்று கொண்டிருந்தது யானை நிற்பதை பார்த்த பேருந்து ஓட்டுனர் பேருந்தை மெதுவாக நிறுத்தினார்.
சாலையில் நின்று கொண்டிருந்த காட்டு யானை மெதுவாக பேருந்தை நோக்கி வந்தது
உடனே சுதாரித்துக் கொண்ட பேருந்து ஓட்டுநர் பேருந்தை மெதுவாக பின்னோக்கி இயக்கினார்.


காட்டு யானையும் தொடர்ந்து பேருந்தை நோக்கி வந்ததால் பேருந்தில் இருந்தவர்கள் அச்சத்தில் இருந்தனர். சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் பேருந்தை பின்னோக்கி இயக்கினார். பின்னர் காட்டு யானை அருகிலுள்ள வனப்பகுதிக்குள் சென்றது இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!