இளைஞர்களின் கனவு கன்னி…. நடிகை ஷ்ரத்தா கபூருக்கே No சொன்ன பிரபல நடிகர் – யார் தெரியுமா?

Author:
26 August 2024, 11:12 am

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஷ்ரத்தா கபூர். மும்பை மகாராஷ்டிராவை சேர்ந்தவரான இவர் பஞ்சாபி வம்சாவளியை சேர்ந்தவர். நடிகை ஷ்ரத்தா கபூர் Aashiqui 2 திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக ஒட்டுமொத்த இளம் ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோயின் ஆக மனதில் இடத்தை பிடித்தார்.

சமீபத்தில் அவரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் ஸ்ட்ரீ 2. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வசூலில் நல்ல கலெக்ஷனில் ஈட்டி இருக்கிறது. உலகம் முழுக்க இதுவரை ரூ. 250 கோடி வரை வசூல் ஈட்டி வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலை இந்நிலையில் இந்திய சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்து வரும் ஷ்ரத்தா கபூரின் காதலையே பிரபல நடிகர் ஒருவர் நிராகரித்த செய்தி ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

அது யார் என்று கேட்டீர்களானால்….பாலிவுட் சினிமாவின் தற்போதைய. டாப் ஹீரோக்களில் ஒருவரான நடிகர் வருண் தவான் தான். ஷ்ரத்தா கபூரின் தந்தையும் வருண் தவானின் தந்தையும் படப்பிடிப்புகளுக்கு செல்லும்போது தங்களது குழந்தைகளான ஷ்ரத்தா கபூர் மற்றும் வருண் தவான் குழந்தைகளாக இருக்கும்போது ஷூட்டிங்கிற்கு அழைத்து செல்வார்களாம்.

அப்போது இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட சந்திப்பில் ஷ்ரத்தா கபூர் வருண் தவானிடம் ஒருமுறை தன்னுடைய காதலை கூறியிருக்கிறார். அப்போது ஷ்ரத்தாவிற்கு 8 வயது தானாம். அப்போதே வருண் தவான் மீது தனக்கு ஈர்ப்பு ஏற்பட்டதாகவும்.

ஆனால் வருண் தவான் தன்னுடைய காதலை ஏற்க மறுத்து நோ சொல்லிவிட்டார் என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதையடுத்து நடிகர் வருண் தவானுக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு நடாஷா என்பவர் உடன் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!