“வாய் மட்டும்தான் வேலை செய்யுது” – 0/40 வெறுங்கை பாஜக.. களத்தில் இறங்கிய SV சேகர்..!

Author: Vignesh
26 August 2024, 4:07 pm
Quick Share

அதிமுகவிற்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் இடையே சமீப காலமாகவே தொடர்ந்து மோதல்கள் நிலவி வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நான் கிளைச் செயலாளர் பதவியில் இருந்து 52 ஆண்டு காலம் உழைத்தது தான் முதலமைச்சர், பொதுச்செயலாளர் பதவிக்கு வந்திருக்கிறேன். ஆனால், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உழைக்காமல் பதவிக்கு வந்தவர்.

annamalai-updatenews360

அந்த கட்சியில் உழைத்த எத்தனையோ தலைவர்களுக்கு பதவி கிடைக்கவில்லை. வேறு ஏதோ வழியில் இவர் பதவி பெற்றுள்ளார். அந்த பதவியை வைத்தது இன்று தலைக்கால் புரியாமல் அண்ணாமலை ஆடிக் கொண்டிருக்கிறார். மக்களைப் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது. அவரின் ஒரே முதலீடு வாயும், நாக்கும்தான். தமிழ்நாட்டு மக்களின் வாக்குகள் மட்டும் பாஜகவுக்கு தேவை. தமிழக பாஜகவின் தலைவராக இருந்து அண்ணாமலை தமிழகத்திற்கு ஒரு நல்ல திட்டத்தை கொண்டு வரவில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி இருந்தார்.

இந்நிலையில், பாஜகவின் பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை எடப்பாடி பழனிச்சாமிக்கு கடுமையாக பதில் அளித்துள்ளார். அதில், பச்சை மையால் 10 வருடமாக கையெழுத்து போட்டு ஒரு பைசா கூட லஞ்சம் வாங்காத என்னை பத்தி பேசுறதுக்கு “தற்குறி” எடப்பாடிக்கு எந்தவித தகுதியும் கிடைக்காது என்று அண்ணாமலை ஆவேசமாக பேசியிருந்தார்.

மேலும், பேசுகையில் நீங்கள் சொல்வது போல் நான் கட்சியின் அடிமட்டத்தில் இருந்து வரவில்லை. உண்மைதான், ஆனால் நான் கட்சிக்குள் வந்ததிலிருந்து தமிழ்நாட்டில் இரு திராவிட கட்சிகளையும் அகற்ற வேண்டும் என்பதிலும், மோடியின் ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன் என்று அண்ணாமலை பேசியிருந்தார்.

இதுகுறித்து பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்றைய அரசியல்வாதிகளிலேயே எடப்பாடி பழனிசாமி தான் புத்திசாலி. இன்றைக்கு இருப்பது போன்ற பதற்றம், தப்பு தப்பான திட்டங்கள் அவரது ஆட்சியில் இருந்ததா?அரசியல் விமர்சனம், கருத்தியல் மோதல் இருக்கலாமே தவிர, ‘தற்குறி’ போன்ற கடுமையான சொற்களை பேசுவது தவறு என அண்ணாமலையின் பேச்சுக்கு சீமான் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இதேபோல், அண்ணாமலையின் இந்த கருத்திற்கு எஸ்வி சேகர் கண்டனம் தெரிவித்து இபிஎஸ்க்கு ஆதரவாக X தள பதிவில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது, “ஒரு கவுன்சிலர்,எம் எல் ஏ , எம்பி ஆக துப்பில்லதவங்க எம்பியாக, எம் எல் ஏ ஆகி இரண்டுமுறை மானில அமைச்சர்,நான்கு வருட முதலமைச்சராக இருந்தவருக்கு சவால் விடுவது கேவலத்தின் உச்சம்” என பதிவிட்டு இருந்தார்.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 164

    0

    0