“அடுத்த திருமண நாளில் இருக்கமாட்டேன்”…. பிஜிலியின் கடைசி வார்த்தை – கதறும் மனைவி!

Author:
27 ஆகஸ்ட் 2024, 6:13 மணி
Quick Share

பிளாக் ஷீப் YouTube சேனலில் பிராங்க் வீடியோ செய்ததன் மூலமாக மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் தான் பிஜிலி ரமேஷ். குடித்துவிட்டு சாலையில் சென்று கொண்டிருந்த பிஜிலி ரமேஷை பிடித்து பிராங் செய்கிறோம் என்று ஒரு வீடியோ எடுத்து வெளியிட்டனர்.

அந்த வீடியோவில் மிகவும் கலகலப்பாக காமெடிடன் பேசிய பிஜிலி ரமேஷ் ஓவர் நைட்டில் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி விட்டார். எந்த குடியால் அவர் சினிமாவில் நடிகராக அறிமுகமானாரோ அதே குடிபோதையால் இன்று அவர் மரணித்திருக்கிற செய்தி ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

ஆம் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக குடி போதைக்கு அடிமையாகி படுத்த படுக்கையாக இருந்து வந்த பிஜிலி ரமேஷ் தற்போது சிகிச்சை பலன் இன்றி திடீரென மரணம் அடைந்திருக்கிறார். ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளிவந்த நட்பே துணை படத்தின் மூலமாக காமெடி நடிகராக திரைத்துறையில் அறிமுகமானார் பிஜிலி ரமேஷ்.

தொடர்ந்து பொன்மகள் வந்தால், ஆடை ,கோமாளி, ஜாம்பி உள்ளிட்ட பல திரைப்படங்களை சின்ன சின்ன கதாபாத்திரங்களை ஏற்று மிகச் சிறந்த காமெடியை வெளிப்படுத்தி நடித்து மக்களின் மனம் கவர்ந்த நடிகராக இருந்து வந்தார். இதனிடையே சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 9 மணி அளவில் மரணித்திருக்கும் பிஜிலி ரமேஷின் உடல் இறுதிச்சடங்கு எம்ஜிஆர் நகரில் உள்ள அவரது இல்லத்தில் சற்றுமுன் நடைபெற்றது.

இந்நிலையில் கணவரின் மரணம் குறித்து பிஜிலி ரமேஷின் மனைவி மேனகா செய்தியாளர்களிடம் பேசும்போது… என்னுடைய கணவர் ரொம்ப நல்லவர் யாரிடமும் கெட்ட பெயர் வாங்கினதே கிடையாது சின்ன பட்ஜெட் படமோ பெரிய பட்ஜெட் படமோ எந்த வாய்ப்பு கிடைத்தாலும் நடிப்பாரு. அதுக்காக அவங்க கொடுக்கிற தொகையை அமைதியா வாங்கிட்டு வருவாரு. இவ்வளவுதான் வேணும் அவ்வளவுதான் வேணும் என்றெல்லாம் கேட்கவே மாட்டார்.

ரஜினியோட தீவிர ரசிகர் ஆன என்னுடைய கணவர் வேட்டையன் அல்லது கூலி படத்தில் எப்படியாவது நடிச்சிடனும் அப்படின்னு ரொம்ப ஆசைப்பட்டாரு. ஆனால் உடல்நிலை சரியில்லாமல் போயிடுச்சு. கிட்டத்தட்ட 15 நாள் கழித்து கடந்த 24ஆம் தேதி தான் ஹாஸ்பிடலில் இருந்து வீட்டுக்கு கொண்டு வந்தோம் அன்னைக்கு தான் எங்களோட திருமண நாள். அப்போது அவர் என்னை அழைத்து அடுத்த திருமண நாளுக்கு நான் இருக்கவே மாட்டேன் அப்படின்னு சொன்னாரு.

நான் அப்படியெல்லாம் இருக்காது நாங்க இருக்கோம் என்று சொன்னோம். நேற்று இரவு என்னிடம் லிம்கா வாங்கிட்டு வர சொன்னாரு. அதை வாங்கிட்டு வந்து வச்ச உடனே செல்போனுக்கு சார்ஜ் போட போயிட்டேன். அப்போ என்னோட கால் அவர் மீது தெரியாத தனமா பட்டுருச்சு.

எப்பவுமே கால் பட்டா ரொம்ப கத்துவாரு ஆனால் நேத்து நைட் அப்படியே கிடந்தார். உடனே நான் பதறி போய் என்ன ஆச்சுன்னு பார்த்தேன் அப்பதான் அவர் இறந்து போனதே எனக்கு தெரிய வந்தது. இமயம் சரிந்து விட்டது என்னை அவர்தான் வழி நடத்தினார் என அவரது மனைவி கண்ணீர் மல்க கூறி இருக்கிறார்.

  • PK என்ன ஒரு தைரியம்… புதிய கட்சியை தொடங்கி மதுக்கடைகளை திறப்பேன் என பிரசாந்த் கிஷோர் வாக்குறுதி!
  • Views: - 87

    0

    0