தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாகவும் நட்சத்திர நடிகையாகும் அந்தஸ்தை பிடித்திருக்கும் நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் தொடர்ச்சியாக பல்வேறு வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார்.
நடிகை சமந்தா ஹே மாயா சேஷாவே திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அப்படத்தின் இளம் ஹீரோவாக நடித்த நடிகர் நாக சைதன்யாவை காதலித்து வந்தார். கிட்டத்தட்ட 8 வருடங்களாக இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் மிகப் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார்கள்.
இந்த திருமணத்திற்கு பிறகு மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்த இந்த ஜோடி நான்கு வருடத்திலேயே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள். ரசிகர்களின் பேவரைட் ஜோடியாக பார்க்கப்பட்ட இவர்களின் விவாகரத்து அவர்களின் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருக்கிறது.
இன்று வரை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. சமந்தா திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடிக்க ஆரம்பித்து பாலிவுட் சினிமாவிலும் வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். அண்மையில் நாக சைதன்யா பிரபல நடிகையான சோபிதா துலிபாலாவை நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டார்.
சமந்தா தொடர்ந்து திரைப்படங்களில் அதிக கவனத்தை செலுத்தி நடித்து வருகிறார். இந்நிலையில் சமந்தாவின் திருமணத்தின் போது எடுத்த வீடியோ ஒன்றில்… சமந்தா மிகவும் எமோஷ்னலாகி உருக்கமாக பேசிய விஷயம் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
அதில் உங்களால் நான் கனவு கண்டது போல் என் வாழ்க்கை மாறுவதை என்னால் உணருகிறேன். நான் பார்த்த மிகச்சிறந்த மனிதர் நீங்கள்… நம் அழகான குழந்தைக்கு ஒரு நாள் நீங்கள் நிச்சயம் நல்ல தந்தையாக இருப்பீர்கள் என்று எனக்கு தெரியும். இந்த உலகத்தில் எந்த ஜென்மத்திலும் எனக்காக உங்களைத்தான் நான் எப்போதும் தேர்ந்தெடுப்பேன் என்று மிகவும் உருக்கமாக காதலில் மூழ்கி பேசியிருக்கிறார்.