JMM கட்சிக்கு குட்பை.. பாஜகவில் இணையும் முன்னாள் முதலமைச்சர் : உட்கட்சி பூசலால் உடையும் I.N.D.I.A கூட்டணி!

Author: Udayachandran RadhaKrishnan
29 August 2024, 10:48 am

ஜார்க்கட்ணட் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

அங்கு ஆட்சி கவிழும் சூழல் இருந்த நிலையில், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்த ஹேமந்த் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர் சம்பாய் சோரனை முதலமைச்சராக தேர்வு செய்தனர்.

தற்காலிக முதலமைச்சராக இருந்து சம்பாய் சோரன் பின்னர், ஹேமந்த் ஜாமீனில் விடுதலையானதால் முதல்வர் பதவி பறிக்கப்பட்டது.

இதனால் அதிருப்தியில் இருந்த சம்பாய், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் உள்ள சில ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜகவில் இணைய உள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் சம்பாய் சோரனை பாஜகவில் இணைக்ககூடாது என அக்கட்சியினரே போர்க்கொடி தூக்கினர்.

இதனால் பாஜக முக்கிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அக்கட்சியில் இணைவதை உறுதி செய்தார்.

இந்த நிலையில் தான் தனது எக்ஸ் பக்கத்தில், ஜார்க்கட்ண முக்தி மோர்ச்சா கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பெறுப்பில் இருந்து விலகி விட்டதாக சம்பாய் சோரன் அறிவித்துள்ளார்.

சம்பாய் சோரன் பதவி விலகியுளளதால், JMM கட்சியில் எம்எல்ஏ எண்ணிக்கை குறையும் வாய்ப்புள்ளது. இதனால் அக்கட்சி அங்கம் வகித்துள்ள INDIA கூட்டணிக்கு இது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

  • Good Bad Ugly Hit of Flop குட் பேட் அக்லி படம் ஹிட்டா? இல்லையா? இன்னும் எவ்வளவு கோடி வசூல் செய்யணும்?