கட்டப்பஞ்சாயத்து பண்ணி மிரட்டுறாங்க.. நகராட்சி சேர்மனை கண்டித்து துணை சேர்மன் வெளிநடப்பு..!

Author: Vignesh
29 August 2024, 5:24 pm

தருமபுரி நகராட்சி 33 வார்டுகளை கொண்டது. இதில், 20 வார்டுகள் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளும் 13 வார்டுகளில் அதிமுக கவுன்சிலர்கள் உள்ளனர். இதில், நகராட்சி சேர்மனாக திமுகவை சேர்ந்த லட்சுமி, துணை சேர்மனாக நித்யா, ஆகியோர் உள்ளனர். இதில், துணை சேர்மன் நித்யாவிற்கு நகர மன்ற கூட்டத்தில் உரிய இருக்கை வழங்காமல் மற்ற கவுன்சிலர்கள் இருக்கைகளைத் தாண்டி கடைசியில் ஒரு ஓரமாக வழங்கப்படுவதாக கடந்த ஓராண்டாக முரண்பாடு இருந்து வந்தது.

மேலும், திமுகவைச் சேர்ந்த சேர்மன் லட்சுமி சக கட்சியை சேர்ந்த உறுப்பினர்களுக்கும் துணைச்சேர்மனுக்கு மரியாதை கொடுப்பதில்லை என அவ்வப்போது குற்றச்சாட்டு எழந்தது. இந்த நிலையில், நகராட்சி அலுவலகத்தில் சாதாரண கூட்டம் இன்று நடந்தது. இதில், கூட்டத்திற்கு வந்த துணை சேர்மன் நித்யா உடனடியாக நகர மன்ற கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து, அவரிடம் கேட்டபோது நகராட்சி கூட்டத்தில் துணைச் சேர்மன் என்ற வகையில் எனக்கு மரியாதை கொடுப்பதில்லை. மேலும் எனக்காக ஒதுக்கப்பட்டும் இருக்கையில் சேர்மனின் கணவர் அமர்ந்து கொள்கிறார். ஒரு வருடமாக இதனை சேர்மனிடம் முறையிட்டும் இதுவரை கண்டு கொள்ளவில்லை. மேலும், அனைவரின் முதுகுக்கு பின்னால் என்னை அமர வைத்துள்ளனர். இதனால், வேறு வழியின்றி அவர்கள் நடவடிக்கையை கண்டித்து நான் வெளி நடப்பு செய்கிறேன்.

இருக்கைகள் அமைக்காதது குறித்து கேட்டால் சேர்மன் லட்சுமியின் கணவர் என்னை மிரட்டுகிறார். மேலும் தருமபுரி நகராட்சி அலுவலகம் போல் இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து அலுவலகம் போல தான் செயல்படுகிறது என்று கூறினார். தருமபுரி நகராட்சியின் நகர மன்ற கூட்டத்தில் திமுகவின் அராஜக போக்கை கண்டித்து திமுக வின் நகர மன்ற துணைத் தலைவரே திமுக தலைவரின் செயலை கண்டித்து வெளிநடப்பு செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  • Allu Arjun arrest and controversy பூகம்பமாய் வெடிக்கும் அல்லு அர்ஜுன் பிரச்சனை…வீட்டின் முன்பு கலவரம்…கண்டுகொள்ளாத போலீஸார்..!
  • Views: - 188

    0

    0