வெட்கக்கேடு…. ஆம்பளைக்கு அர்த்தமே இல்லை – மோகன் லாலை விளாசித்தள்ளிய நடிகை பார்வதி!

Author:
30 August 2024, 2:32 pm

கடந்த ஒரு வார காலமாகவே மலையாள சினிமாவில் பாலியல் தொல்லைகளும் அதன் புகார்களும் தலைவிரித்து ஆடி வருகிறது. இதை அடுத்து பல முக்கிய பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டது. குறிப்பாக நடிகர்கள், ஜெயசூர்யா சித்திக், ரியாஸ் கான் உட்பட பலர் மீதும் புகார்கள் கூறப்பட்டு வந்த நிலையில் மோகன் லால் உள்ளிட்ட 17 பேர் கொண்ட மலையாள சினிமா நிர்வாகிகள் கூண்டோடு நேற்று ராஜினாமா செய்து விட்டனர்.

இந்த விஷயம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து நடிகை பார்வதி இது குறித்து காட்டமாக விமர்சித்திருக்கிறார். அதாவது, இந்த செய்தி நான் கேள்விப்பட்ட உடனே என் மனதில் தோன்றிய முதல் விஷயம் எவ்வளவு கோழைத்தனமான செயல் இது? என்பதுதான்.

ஊடகங்களிடம் குறித்து விளக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் அவர்கள் இவ்வாறு கோழைத்தனமாக பொறுப்பில் இருந்து எப்படி விலகலாம்? மீண்டும் இந்த விவாதத்தை முன்னோக்கி எடுத்துச் செல்லும் பொறுப்பு பெண்களிடமே வந்துள்ளது.

பெண்கள் தான் முன்வந்து புகார் அளித்து எஃப் ஐ ஆர் பதிவு செய்ய வேண்டும் என்று கூறி கேரளா அரசும் அலட்சியமாக இருந்தது. ஒட்டுமொத்த சுமையும் பெண்கள் மீது சுமத்தப்பட்டு அதன் பிறகாக விண்வெளிவுகளையும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுத்தப்படுகிறது .

ஒரு வேலை நாங்கள் தைரியமாக முன்வந்து பெயர்களை கூறினால் எங்களுக்கு நீதி கிடைக்கும் என்பதற்கு என்ன உத்தரவு? அதன் பிறகு எங்களுடைய கெரியர், வாழ்க்கை ,கோர்ட் ,செலவு ,மனநல பிரச்சனை இதைப் பற்றி எல்லாம் யாரும் கவலைப்படுவதில்லை என பார்வதி மிகவும் காட்டமாக தன்னுடைய கருத்தை பதிவு செய்திருந்தார்.

  • vijay is a comedian in politics statement by college student விஜய் ஒரு காமெடியன்- தவெக தலைவரை கண்டபடி விமர்சித்த கல்லூரி மாணவர்கள்…