திருச்சி NIT பாலியல் அத்துமீறல் சம்பவம்… மாணவிகள் சரமாரி புகார் : விடுதி நிர்வாகிகள் கூண்டோடு காலி!
Author: Udayachandran RadhaKrishnan31 August 2024, 11:56 am
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள என் ஐ டி கல்லூரியில் நேற்று முன் தினம் விடுதியில் இருந்த மாணவியரிடம் ஒப்பந்த ஊழியர் பாலியல் அத்துமீறல் சம்பவத்தால், கல்லூரி மாணவர்கள் 12 மணி நேரம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண்குமார் பேச்சு வார்த்தையை மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து ஒப்பந்த ஊழியர் கதிரேசன் என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் மாணவிகள் அணியும் ஆடை குறித்து விமர்சனம் செய்த கூறி மாணவிகள் குற்றச்சாட்டு முன்வைத்த வைத்தனர்.
இதற்காக விடுதி வார்டன் மாணவிகள் முன்னிலையில் மன்னிப்பு கூறியதால் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் திருச்சி என் ஐ டி கல்லூரி விடுதி காப்பாளர் பேபி அப்பொறுப்பிலிருந்து விலகினார்.
இந்நிலையில் மேலும், இரண்டு விடுதி காப்பாளர்களான சபிதாபேகம், மகேஸ்வரி ஆகிய வரும் பதவி விலகியதாக கூறப்படுகிறது.
ஆனால், இது குறித்து என்ஐடி கல்லூரி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக எவ்வித அறிக்கையும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.