NIT பாலியல் அத்துமீறல் விவகாரம்.. மாணவிகளை கண்டித்த பெண் காப்பாளர் எடுத்த முடிவு..!

Author: Vignesh
31 ஆகஸ்ட் 2024, 1:27 மணி
NIT
Quick Share

திருச்சி என் ஐ டி மாணவிகள் விடுதியில் அவர்களின் வசதிக்காக ஒவ்வொரு அறையிலும், இணையதள சேவை அளிப்பதற்காக நேற்று காலை ஒப்பந்த ஊழியர்கள் ஐந்து பேர் சென்றுள்ளனர். அப்போது, ஒரு அறையில் மாணவி தனியாக இருக்கும்போது இணையதள சேவை அளிப்பதற்காக வந்த ஊழியர் ஒருவர் அந்த மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். சுதாரித்துக்கொண்ட மாணவி வெளியே ஓடிவந்து சத்தம்போட்டுள்ளார்.

இதுகுறித்து விடுதி வாடனிடம் அந்த மாணவி புகார் கூறிய போது அவரை தரை குறைவாக வாடன் பேசியதாக தெரிகிறது. இதனால், வார்டன் மீதும் ஒப்பந்த ஊழியர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் விடிய விடிய நடந்தது.

அதே சமயம் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்தார். இதனை தொடர்ந்து விடுதி கண்காணிப்பாளர் மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து மாணவர்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டு உள்ளனர்.

NIT

இருந்த போதும் அவர்கள் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர். கல்லூரி நிர்வாகத்திலும் கூறியுள்ளோம். அந்த கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக கல்லூரி நிர்வாகமும் தெரிவித்துள்ளது. பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கதிரேசன் என்கிற ஒப்பந்த ஊழியர் கைது செய்யப்பட்ட நிலையில், இதையடுத்து, விடுத்துக் காப்பாளர் பேபி என்பவர் மாணவர்கள் மத்தியில் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கூறினார்.

அதன் பின்னர், மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்நிலையில், திருச்சி என்ஐடி விடுதியில் மாணவி பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரின் அடிப்படையில் விடுதியின் பெண் காப்பாளர் பேபி தன் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளதாக கூறியுள்ளார். மற்ற விடுதி காப்பாளர்கள் சபிதா பேகம், மகேஸ்வரி ஆகியயோர் திங்கள் அன்று ராஜினாமா செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

  • PK என்ன ஒரு தைரியம்… புதிய கட்சியை தொடங்கி மதுக்கடைகளை திறப்பேன் என பிரசாந்த் கிஷோர் வாக்குறுதி!
  • Views: - 201

    0

    0