படுக்கையறையில் தூக்கில் தொங்கிய 9ஆம் வகுப்பு மாணவன்… விசாரணையில் பகீர் : ஷாக் சம்பவம்!

Author: Udayachandran RadhaKrishnan
31 August 2024, 1:57 pm

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து ராக்கியபாளையம், பாலாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் ரேணுகாதேவி (34).

இவர் திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள ஸ்டுடியோவில் எடிட்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் கனகராஜ் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துள்ளார்.

காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு, ராக்கியாபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் விதர்ஷனா (15) என்ற மகளும் மற்றும் அதே பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் ஹர்ஷன் (14) என்ற மகனும் உள்ளனர்.

ரேணுகா தேவி தனது குழந்தைகளுடன் ராக்கியாபாளையம் பாலாஜி நகர் பகுதியில் உள்ள தனது அப்பா மருதநாயகம் அம்மா சுமதி ஆகியோருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று ரேணுகா தேவியின் மகன் ஹர்ஷன் வழக்கம் போல பள்ளிக்கு சென்று விட்டு மாலை வீட்டின் அருகே டியூஷன் சென்று விட்டு மாலை வீடு திரும்பியுள்ளார்.

வீட்டிற்கு வந்ததும் வீட்டின் மேல் தளத்தில் உள்ள படுக்கை அறைக்கு சென்றுள்ளார். இதையடுத்து நீண்ட நேரம் ஆகியும் ஹர்ஷன் வெளியே வராததால் அவரது பாட்டி சுமதி, இரவு சென்று பார்த்தபோது, படுக்கையறையில் தூக்கில் தொங்கியபடி ஹர்ஷன் இருந்துள்ளார்.

அதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பாட்டி சுமதி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஹர்ஷனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தியதை அடுத்து, இரவு அவிநாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஹர்ஷன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த திருமுருகன்பூண்டி போலீசார் பிரேதத்தை அவிநாசி அரசு மருத்துவமனையில் உள்ள பிரேதப் பரிசோதனை அறையில் பிரேத பரிசோதனைக்காக வைத்தனர்.

மேலும், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.டியூசன் முடித்து வந்த சிறுவன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை இந்த தகவலும் தெரியவில்லை.

இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி முடித்து வந்த சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 227

    0

    0