என் உயிர் பிரியும் போது கூட என் தொகுதிப் பெயரை சொல்லித்தான் செல்வேன் : அமைச்சர் துரைமுருகன் உருக்கம்!

Author: Udayachandran RadhaKrishnan
31 ஆகஸ்ட் 2024, 2:34 மணி
Duraimurugan
Quick Share

நெடுஞ்சாலை துறை சார்பில் 35 கோடி மதிப்பீட்டில் வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பொன்னை ஆற்றின் குறுக்கே சித்தூர் – திருத்தணி நெடுஞ்சாலையில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு, கைத்தறி துணிவு துறை அமைச்சர் ஆர்.காந்தி உள்ளிட்டோர் திறந்து வைத்தார். உடன் நெடுஞ்சாலை துறை செயலாளர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் இருந்தனர்.

விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், இந்த விழாவில் உங்களைப் பார்க்க நான் வருந்தேன். என்னை பார்க்க மழை வந்து விட்டது.

தற்போது திறக்கப்பட்டுள்ள பொன்னை ஆற்று பாலம் நான் இல்லாவிட்டாலும் நூறு ஆண்டுக்கு பின்னும் இது துரைமுருகன் கட்டிய பாலம் என பெயர் சொல்லும். தொகுதியை நான் எப்போதும் கோயிலாக பார்பவன் நான்.

என் உயிர் பிரிகிற போது கூட என் தொகுதியின் பெயரை சொல்லித்தான் செல்வேன். எப்போதும் தொகுதிக்கு சேவகனாக இருப்பேன் என அமைச்சர் துரைமுருகன் பேசினார்.

  • PK என்ன ஒரு தைரியம்… புதிய கட்சியை தொடங்கி மதுக்கடைகளை திறப்பேன் என பிரசாந்த் கிஷோர் வாக்குறுதி!
  • Views: - 313

    0

    0