ஒரு வழியா ஆரம்பிச்சாச்சு… பார்முலா கார் பந்தயத்தை துவக்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி!

Author: Udayachandran RadhaKrishnan
31 August 2024, 8:25 pm

சென்னை தீவுத்திடல் பகுதியில் பார்முலா 4 கார் பந்தயத்தை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சர்வதேச ஆட்டோ மொபைல் கூட்டமைப்பு சார்பில் ஒரு மணி நேரம் ஆய்விற்கு பிறகு தரச்சான்றிதழ் வழங்கிய நிலையில், கார் பந்தயம் தொடங்கியுள்ளது. எப்ஐஏவிடம் இருந்து தற்காலிக சான்று பெறப்பட்டதன் அடிப்படையில், போட்டிக்கான புதிய அட்டவணையும் வெளியிடப்பட்டது.

அதன்படி இன்று இரவு 7 மணிக்கு பயிற்சி போட்டிகள் தொடங்கியது. முதல்நாள் நிகழ்வுகள் இரவு 11 மணிக்கு நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3.7 கி.மீ. தொலைவு கொண்ட சென்னை பார்முலா 4 கார் பந்தய சர்க்யூட், தீவுத்திடலில் தொடங்கி, போர் நினைவுச் சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை, அண்ணா சாலை ஆகியவற்றின் வழியே மீண்டும் தீவுத்திடலை அடைவதுடன் நிறைவடைகிறது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 227

    0

    0