23 நாளா கஷ்டப்பட்டோம்.. இப்போ ஹேப்பி : உதகை வந்த சுற்றுலா பயணிகள் நெகிழ்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
1 September 2024, 12:53 pm

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.யுனெஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்த மலை ரெயிலில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து மலைப்பகுதியில் உள்ள இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் பாதையில் அடர்லி_ ஹில் குரோவ் ரெயில் நிலையங்கள் இடையே மண் சரிவு ஏற்பட்டு ரயில் பாதையில் பாறாங்கற்கள் , மண் சரிந்து ரெயில் பாதையை மூடியது.

மரங்கள் சாய்ந்து ரெயில் பாதையின் குறுக்கே விழுந்தன. ரயில் பாதையை சீரமைக்கும் பணியில் ரயில்வே தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை மற்றும் மலைரெயில் பாதையில் பாலம் பராமரிப்பு பணிகள் அடிப்படையில் நடைபெற்று வந்ததால் கடந்த 9ம் தேதி முதல் நேற்று 31ஆம் தேதி வரை ஊட்டி மலை ரெயில் சேவையை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் ரத்து செய்தது.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் மழையின் அளவு குறைந்ததாலும் ரெயில் பாதையை பராமரிக்கும் பணி முடிவடைந்ததாலும் 23 நாட்களுக்கு பின்னர் மீண்டும் மேட்டுப்பாளையம் ஊட்டி இடையே இன்று முதல் மலை ரெயில் இயக்கப்படும் என்று சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு வழக்கம்போல் இன்று காலை மலைரெயில் புறப்பட்டு சென்றது மலை ரெயிலில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து மலைப்பகுதியில் உள்ள இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்தனர்.

  • Ajithkumar in GBU இன்னும் ஏழே நாள் தான்.. Good Bad Ugly செம அப்டேட்!
  • Views: - 246

    0

    0