‛ஆட்டிசம்’ பாதித்த மகனுக்காக மூச்சுமுட்ட தந்தை எடுத்த ரிஸ்க்.. உதவிக்கரம் நீட்டிய யூடியூபர் இர்பான்..!
Author: Vignesh2 September 2024, 3:10 pm
கோவையில் ரயில் நிலையம் அருகே உள்ள போச்சே ஃபுட் எக்ஸ்பிரஸ் உணவகத்தின் சார்பாக கடந்த புதன்கிழமை பிரியாணி போட்டி ஒன்று நடத்தப்பட்டது. ஆறு பிரியாணி சாப்பிட்டால் ஒரு லட்சம் ரூபாய் பரிசும் , ஐந்து பிரியாணி சாப்பிட்டால் 50 ஆயிரம் பரிசு, மூன்று பிரியாணி சாப்பிட்டால் 25 ஆயிரம் பரிசும், என விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. இப் பிரியாணி போட்டியில் பங்கேற்பதற்காக கோவை மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கானோர் வந்தனர்.
முன்னதாக, கோவை சின்னவேடம்பட்டியை சேர்ந்த வாடகை கார் ஓட்டுநர் கணேசன் மூர்த்தி தனது குழந்தை ஆட்டிசம் பாதிப்பால் ஏற்பட்டதால் மருத்துவ செலவிற்காக பிரியாணி போட்டியில் கலந்து கொண்டு 50,000 ரூபாய் வெற்றி பெற்ற நிலையில், Youtuber இப்ரான் வாடகை கார் ஓட்டுநர் கணேசமூர்த்திக்கு ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் மருத்துவ செலவிற்காக வழங்கியது மட்டுமில்லாமல் அவருக்கு பிரியாணி சாப்பிடுவதற்கு பிரியாணியும் கொடுத்துள்ளார். அதனை இப்ரான் தனது youtube பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.