பாலிவுட் நடிகருடன் பலான காட்சியில் மாளவிகா – வீடியோ பார்த்து திக்குமுக்காடிப்போன ரசிகர்கள்!

Author:
2 September 2024, 2:39 pm

இந்திய சினிமாவின் பிரபல இளம் நடிகையான மாளவிகா மோகனன். மும்பையில் பிறந்து வளர்ந்து தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். மாடல் அழகியாக தனது வாழ்க்கையை துவங்கிய மாளவிகா மோகன் பின்னர் திரைப்பட நடிகையாக அறிமுகமாகினார்.

saathiya malavika song

தற்போது முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்ட திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தது . இவரது தந்தை பிரபல பாலிவுட் திரைப்பட ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

தந்தையின் மூலமாக வாய்ப்புகள் மிக சுலபமாக கிடைத்துவிட்டாலும் மாளவிகா மோகன் அதை தனது திறமையால் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அதை அடுத்து விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்தில் அவருக்கு கதாநாயகியாக மாளவிகா மோகன் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் மூலமாக ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

malavika mohanan yudhara movie

தற்போது கடைசியாக விக்ரம் நடிப்பில் வெளிவந்து திரையரங்கங்களை வெற்றிடை போட்டுக் கொண்டிருக்கும் தங்கலான் திரைப்படத்தில் மாளவிகா மோகன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறார்.

தற்போது நடிகை மாளவிகா மோகன் பாலிவுட்டில் “யுத்ரா” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சித்தாந்த் சதுர்வேதி ஹீரோவாக நடிக்கிறார். இந்த படம் வருகிற செப்டம்பர் 20ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் படு பிஸியாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள “சாதியா” என்ற பாடலுக்கு படு ரொமான்டிக்காக ஹீரோவுடன் நெருக்கமாக காட்சிகளில் நடித்திருக்கிறார் மாளவிகா மோகனன். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி மாலு என்ன இதெல்லாம்/ என தமிழ் ரசிகர்கள் விழி பிதுங்கி அந்த வீடியோவை பார்த்து ஷாக் ஆகிவிட்டனர். இதோ அந்த வீடியோ:

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?