JUST MISS.. கனமழை காரணமாக அடித்து செல்லப்பட்ட ரயில் தண்டவாளங்கள்..!

Author: Vignesh
2 செப்டம்பர் 2024, 4:42 மணி
Railway station
Quick Share

கடந்த இரண்டு நாட்களாக ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் பெய்த கன மழை காரணமாக இருப்பு பாதைகளில் மணல் அரிப்பு ஏற்பட்டு ரயில் தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளன.

ஒரு சில இடங்களில் சிக்னல் கம்பங்கள் சரிந்து விழுந்து விட்டன. எனவே, ரயில் போக்குவரத்தை இயக்குவது சவாலான காரியமாக ரயில்வே அதிகாரிகளுக்கு மாறி உள்ளது. இதன் காரணமாக பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Railway station

இந்த நிலையில், ஆந்திர மாநிலம் என் டி ஆர் மாவட்டத்தில் உள்ள ராயண்ணாபாடு ரயில் நிலையத்தில், ரயில் தண்டவாளம் அடித்து செல்லப்பட்டதால் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் முன் செல்ல இயலாமல் மழை வெள்ளத்தின் இடையே சிக்கிக்கொண்டது.

Railway station

கடந்த சனி அன்று முதல் ராயண்ணாபாடு ரயில் நிலையத்தில் சிக்கி கொண்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பயணிகள் அங்கிருந்து வெளியேற இயலாமல் தவிர்த்து வந்த நிலையில், அவர்களை ரயில்வே அதிகாரிகள் டிராக்டர், ஜேசிபி ஆகியவை மூலம் மீட்டு அரசு பேருந்தில் விஜயவாடா அனுப்பி வைத்தனர்.

  • ரூ.411 கோடி அரசு நிலம் அபேஸ்? அறப்போர் இயக்கம் கைகாட்டும் அமைச்சர்!
  • Views: - 192

    0

    0