கோவையில் மகள் வயதுடைய சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 40 வயது நபர் மீது பாய்ந்தது குண்டாஸ்..!!
Author: Udayachandran RadhaKrishnan3 September 2024, 12:15 pm
கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பள்ளியில் படிக்கும் 13 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சூலூர் பகுதியை சிவகுமார் (40) என்பவரை கைது கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் குற்றவாளியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன்., பரிந்துரை செய்ததன் அடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி 13வயது சிறுமிக்கு பாலியல் வன்புணர்ச்சி செய்த சிவகுமார் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.
அவ்வுத்தரவின்படி பாலியல் வன்புணர்ச்சி வழக்கு குற்றவாளியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.