மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வாடகை செலுத்தாத அறநிலையத்துறை இணை ஆணையர் : வேலியே பயிரை மேயலாமா?

Author: Udayachandran RadhaKrishnan
3 September 2024, 1:16 pm

மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான கட்டடங்கள் மதுரை தெற்கு – மேற்கு சித்திரை வீதி சந்திப்பு மற்றும் எல்லீஸ் நகரில் உள்ளது

2017 ஆம் ஆண்டு வரை மதுரை தெற்கு – மேற்கு சித்திரை வீதி சந்திப்பு கட்டத்தில் செயல்பட்ட இணை ஆணையர் அலுவலகம் பின்னர் எல்லீஸ் நகர் அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது

இக்கட்டடங்களில் வாடகை அடிப்படையில் இந்து அறநிலையத்துறையின் மதுரை மண்டல ஆணையர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

மதுரை தெற்கு – மேற்கு சித்திரை வீதி சந்திப்பு கட்டடத்திற்கு 59,080 ரூபாயும், எல்லீஸ் நகர் கட்டத்திற்கு 59,06,813 ரூபாயும் வாடகை பாக்கி வைக்கப்பட்டுள்ளது

தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி தினகரன் என்பவர் மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகம் அளித்த பதிலில் 59 இலட்சத்து 65 ஆயிரத்து 893 ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது

கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள், கட்டிடங்களில் வாடகை வசூல் செய்வதில் தீவிர நடவடிக்கை மேற்க் கொள்ளும் இந்து அறநிலையத்துறையின் மதுரை மண்டல அலுவலகம் தனது வாடகையை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளது ஆர்.டி.ஐ வழியாக தெரிய வந்துள்ளது

  • Lokesh Kanagaraj Kaithi 2 Updates சொர்க்கவாசல் படத்தால் கைதி 2 – க்கு சிக்கல்..குழப்பத்தில் லோகேஷ் ..!
  • Views: - 249

    0

    0