இளைஞர் மரணத்தில் திருப்பம்.. கொலை செய்த டாஸ்மாக் ஊழியர்கள் கைது : பிறந்த 10 நாட்களே ஆன குழந்தையுடன் மனைவி கோரிக்கை!

Author: Udayachandran RadhaKrishnan
3 September 2024, 6:01 pm

கோவை ஆலாந்துறை அருகே உள்ள வெள்ளிமடை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய பரணிதரன் ஒப்பந்த துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகிறார்.

இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த அனுசியா என்பவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து அதே பகுதியில் குடியிருந்து வந்தனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் கடந்த 24 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்து உள்ளது.

இதனைக் கொண்டாடும் விதமாக அவருடன் பணியாற்றும் அஜித் என்ற முருகன், கார்த்திகேயன் ஆகியோருடன் பூளுவம்பட்டியில் உள்ள டாஸ்மாக் மது கடையில் உள்ள பாரில் மது அருந்தும் போது அங்கு உள்ள பார் ஊழியரிடம் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது.

அதில் பாரில் பணியாற்றிய ஊழியர்கள் மூன்று பேர் தாக்கியதில் பரணிதரன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 2 நாட்கள் பிறகு கணவர் பரணிதரன் காணவில்லை என்று ஆலாந்துறை காவல் நிலையத்தில் மனைவி அனுசியா புகார் அளித்தார்.

புகாரின் பேரில் காவல் துறை விசாரணை நடத்தி வந்த நிலையில், கடந்த 29 ஆம் தேதி கிணற்றில் பிணமாக அனுசியாவின் கணவனின் உடலை மீட்டனர் ஆலாந்துறை காவல்துறையினர்.

அப்பொழுது கழுத்து மற்றும் நெற்றி பகுதியில் காயம் இருந்தது. இது குறித்து காவல் துறையிடம் மனைவி அனுசுயா புகார் அளித்து உள்ளார்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் டாஸ்மாக் பார் ஊழியர்கள் ராமகிருஷ்ணன், சங்கர் மற்றும் சண்முகம் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.

இந்நிலையில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பிறந்து பத்து நாட்களில் ஆன தனக்கும், தனது குழந்தைக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார் மனைவி அனுசியா.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி