பற்றி எரியும் பாலியல் புகார்கள்: சுசித்ராவுக்கு எதிராக மலையாள நடிகை பரபரப்பு புகார்!

Author:
3 September 2024, 6:33 pm

கடந்த 2016 ஆம் ஆண்டு சுச்சி லீக்ஸ் விவகாரத்தில் சிக்கி மிகவும் சர்ச்சைக்குள்ளானவர் பிரபல பாடகி சுசித்ரா. இவர் சுச்சி லீக்சில் பல நடிகர் நடிகைகளின் அந்தரங்க வீடியோக்கள் புகைப்படங்கள் வெளியிட்டு பெரும் பரபரப்பை கிளப்பினார்.

மேலும் இந்த விவகாரத்தில் பல நடிகர் நடிகைகளின் அந்தரங்க லீலைகளை அவிழ்த்து விட்டார் பாடகி சுசித்ரா. இதனால் ஒட்டுமொத்த திரையுலகமே கொந்தளித்து எரிந்தது. அந்த வகையில் பிரபல மலையாள நடிகையான ரீமா கல்லிங்கல் போதை பார்ட்டிகளை தொடர்ந்து நடத்தி வந்தார் என்றும் அவரது கெரியர் பாதிக்கப்பட்டதற்கு அவர் நடத்திய மது பார்ட்டிகளே காரணம் என்றும் ஆங்கில செய்தி சேனலுக்கு பாடகி சுசித்ரா பகிரங்கமாக பேட்டி ஒன்றை அளித்திருந்தார் .

மேலும், அந்த பேட்டியில் பேசிய பாடகி சுசித்ரா நடிகர் ரீமா கல்லிங்கல் மற்றும் அவரது அப்போதைய காதலன் ஆசிக் அபு மீது கொச்சியில் ரெய்டு நடத்தப்பட்டது. அந்த சமயங்களில் ரீமா வீட்டில் நடந்த பார்ட்டிகளில் ஆண்களும் பெண்களும் போதைப்பொருட்களை பயன்படுத்தினார்கள். ஆனால் யாருமே இதைப்பற்றி நடிகை ரீமாவிடம் கேள்வி கேட்பதில்லை.

ரீமா இதுபோன்ற விஷயங்களில் ஈடுபட்டு இருக்கிறார் என்பதை தெரிந்த போது என்னால் நம்பவே முடியவில்லை. அந்த பார்ட்டிகளில் கலந்து கொண்ட பல மலையாள பாடகர்கள் வேதனைப்படும் விஷயங்களை தெரிவித்து இருந்தார்கள். அவர்கள் தரும் சாக்லேட் கூட நாங்கள் தொட மாட்டோம் என்பார்கள்.

அதில் கலந்துகொள்ளும் நடிகர்களே நாங்கள் போதை பொருட்களை பயன்படுத்தவில்லை என்றால் எங்களால் நடிக்க முடியாது. ஷூட்டிங்கிற்கே வர முடியாது என்பார்கள். இந்த அளவுக்கு அங்கு போதைப் பழக்கம் வற்புறுத்தப்பட்டு தலைவிரித்து ஆடிக்கொண்டிருந்தது என பாடிய சுசித்ரா பேசியிருந்தது பெரும் பரபரப்பு கிளப்பிடுது.

இது அடுத்து தற்போது சுசித்ராவுக்கு எதிராக நடிகை ரீமா கல்லிங்கல் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார். தமிழ் திரைப்பட பின்னணி பாடகியான சுசித்ராவுக்கு எதிராக கேரள நடிகை புகார் கொடுத்திருப்பது அங்குள்ள சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த புகாரில் “இளம் பெண்களுக்கு போதை விருந்து நடத்தியதாக என் மீது குற்றம் சாட்டியிருந்த பாடகி சுசித்ரா மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என புகார் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

  • Rajkumar Periyasamy Pan-India Film ஒரே படம் ஓஹோ-னு வாழ்க்கை…பாலிவுட்டில் களம் இறங்கிய அமரன் பட இயக்குனர்..!
  • Views: - 310

    0

    0