ஆரஞ்சு பழத்த விட இதுல எக்கச்சக்கமான வைட்டமின் C இருக்கு!!!

Author: Hemalatha Ramkumar
4 September 2024, 12:26 pm

வைட்டமின் சி என்பது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு அவசியமான ஊட்டச்சத்து ஆகும். வைட்டமின் சி என்றாலே நமது முதலில் ஞாபகத்திற்கு வருவது ஆரஞ்சு பழங்கள்தான். ஆனால் ஆரஞ்சு பழங்கள் மட்டுமல்லாமல் இன்னும் வேறு சில உணவுகளில் வைட்டமின் சி சத்து ஏராளமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆரஞ்சு பழங்களை விட வைட்டமின் சி அதிகம் கொண்ட உணவுகள் உள்ளன. இந்த பதிவில் அவை என்னென்ன உணவுகள் என்பதை தெரிந்து கொள்ளலாம். 

நெல்லிக்காய்

நெல்லிக்காய் என்பது அதிக அளவு வைட்டமின் சி உள்ளடக்கத்திற்கு பெயர் போன ஒரு பிரபலமான சூப்பர் ஃபுட் என்று தான் சொல்ல வேண்டும். இது வலிமையான நோய் எதிர்ப்பு அமைப்புக்கு ஆதரவு தருவது, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மற்றும் செரிமானத்தை ஊக்குவிப்பதற்கு உதவுகிறது. நெல்லிக்காயில் உள்ள ஆன்டிஆக்சிடென்ட் பண்புகள் ஆக்சிடேட்டிவ் அழுத்தம் மற்றும் வீக்கத்திற்கு எதிராக போராடுகிறது. 

கொய்யாப்பழம்  

இந்தியாவில் மிக எளிதாக கிடைக்கும் கொய்யா பழங்களில் போதுமான அளவு வைட்டமின் சி காணப்படுகிறது. இது நோய் எதிர்ப்பு ஆரோக்கியத்தை பராமரிப்பது முதல் அதில் உள்ள அதிக நார்ச்சத்து காரணமாக செரிமானத்தை ஊக்குவிப்பது போன்றவற்றிற்கு உதவுகிறது. மேலும் கொய்யா பழங்களில் காணப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் காரணமாக அது பல்வேறு விதமான தொற்றுகளுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கிறது. 

சிவப்பு குடை மிளகாய் 

சிவப்பு குடைமிளகாயில் வைட்டமின் சி சத்து அதிகம் காணப்படுகிறது. மேலும் பீட்டா கரோட்டின் என்ற ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நோய் எதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்தி, கண் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு ஆதரவளிக்கவும் துணை புரிகிறது. மேலும் சிவப்பு குடைமிளகாயில் வீக்க எதிர்ப்பு பலன்களும் காணப்படுகிறது. 

கறிவேப்பிலை 

இந்திய சமையலில் பொதுவாக பயன்படுத்தப்படும்  கறிவேப்பிலை வைட்டமின் சி சத்தின் அற்புதமான ஒரு மூலமாக அமைகிறது. இது செரிமானத்தை ஊக்குவிப்பது, கல்லீரல் செயல்பாட்டிற்கு ஆதரவு அளிப்பது மற்றும் ஆன்டிஆக்சிடென்ட் பண்புகள் காரணமாக சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவது போன்ற நன்மைகளை அளிக்கிறது.  

கிவி

பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கிவி பழத்தில் நோய் எதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்தும் பண்புகள் அதிக அளவில் உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆரோக்கியமான சருமத்தை ஊக்குவிக்கவும், செரிமானம் சிறந்த முறையில் நடைபெறவும் உதவுகிறது. மேலும் கிவி பழத்தில் வைட்டமின் கே மற்றும் நார்ச்சத்து போன்ற பிற ஊட்டச்சத்துக்களும் காணப்படுகிறது. 

ப்ராக்கோலி

வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் பல்வேறு ஆன்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்த ப்ராக்கோலி நோய் எதிர்ப்பு ஆரோக்கியத்திற்கு ஆதரவாளித்து, உடலில் உள்ள நச்சு கழிவுகளை அகற்றி, நாள்பட்ட நோய்களை தடுப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. 

காலிஃப்ளவர்

குறைந்த கலோரி காய்கறியான காலிஃப்ளவரில் அதிக அளவு வைட்டமின் சி காணப்படுகிறது. இந்த காய்கறியும் நோய் எதிர்ப்பு செயல்பாட்டுக்கு ஆதரவளிப்பது செரிமானத்தை ஊக்குவிப்பது மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு பங்களிப்பது போன்ற பல்வேறு பலன்களை நமக்கு அளிக்கிறது. 

மாம்பழம்

நம் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான  மாம்பழத்திலும் அதிகளவு வைட்டமின் சி உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மற்றும் அதிக நார்ச்சத்து காரணமாக செரிமானத்திற்கு ஆதரவளிப்பது போன்றவற்றை செய்கிறது. 

பப்பாளி  

பப்பாளி பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி மற்றும் பப்பைன் என்ற செரிமான நொதி உள்ளது. பப்பாளி பழம் நோய் எதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்துவது, சரும ஆரோக்கியத்திற்கு பங்களிப்பது, செரிமானத்தை ஊக்குவிப்பது, வீக்கத்தை குறைப்பது போன்ற ஆரோக்கிய பலன்களை அளிக்கிறது.

Fake Panner
  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…
  • Close menu