இடுக்கி அணைக்கு சுற்றுலா போகணுமா? கேரள அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
4 September 2024, 4:34 pm

இடுக்கி அணை பல்வேறு வரலாற்று சிறப்புமிக்கதாகும். இடுக்கி அணை ஆர்ச் வடிவிலும், அதன் அருகே செருதோணி அணை நேர் வடிவிலும் கட்டப்பட்டுள்ளபோதும் தண்ணீர் ஒன்றாக தேங்கும்.

ஓணம், கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகிய பண்டிகைகளின்போது மட்டும் சுற்றுலா பயணிகள் அணையைக் காண அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் கேரள மின் வாரிய அமைச்சர் கிருஷ்ணன்குட்டி தலைமையில் சட்டசபை ஆய்வு குழு இடுக்கி அணையை நேரில் பார்வையிட்டனர். அதனையடுத்து இடுக்கி மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது

இடுக்கி, செருதோணி அணைகளை புதன், தண்ணீர் திறக்கும் நாட்கள் தவிர அனைத்து நாட்களில் பொதுமக்கள் காண மூன்று மாதங்களுக்கு அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டது. ஒரே நேரத்தில் 20 பேர் அனுமதிக்கப்படுவர்.

மாவட்ட ஆட்சியர் பரிந்துரைத்த அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளும் கடைபிடிக்கப்படும். கடும் மழைக்கான வானிலை முன்னெச்சரிக்கைகள் (எல்லோ, ஆரஞ்ச் அலர்ட்டுகள்) விடுக்கப்படும் நாட்களிலும், மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சுற்றுலாவுக்கு கட்டுப்பாடுகள் விடுக்கும் நாட்களிலும் அனுமதி இல்லை.

மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. தற்காலிக கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்படும், என கூறப்பட்டுள்ளது.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!