கடைதிறப்பு விழாக்களில்…. 80% படுத்தால் தான் பட வாய்ப்பு – பகிரங்கமாக கூறிய பிரபல நடிகை!

Author:
6 September 2024, 1:50 pm

திரைப்படத்துறையில் கடந்த சில நாட்களாகவே ஹேமா அறிக்கையின் பாலியல் புகார்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக இயக்குனர், தயாரிப்பாளர்கள் மற்றும் திரைப்படத்தைச் சார்ந்த ஆண் ஆதிக்கம் நிறைந்தவர்களால் பெண்கள் பல பேர் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டதாக கூறி பொதுவெளியில் வந்து வெளிப்படையாக பகிரங்கமாக புகார்களை கூறி வருகிறார்கள்.

hema-commision

மிகப்பெரிய நட்சத்திர நடிகர்கள் பலபேர் இந்த விவகாரத்தில் சிக்கி வருவதால் இந்த விஷயம் பெரும் பூதாகரமாக வெடிக்க துவங்கியுள்ளது. குறிப்பாக மலையாள சினிமாவில் மோகன்லால் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பிரபலங்கள் மீது தொடர்ந்து அடுத்தடுத்த பாலியல் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

மேலும் பல நட்சத்திர பிரபலங்கள் மீது நடிகைகள் தங்களுக்கு பட வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி படுக்கைக்கு அழைத்ததாக பகிரங்கமாக புகார்களை தெரிவித்து வருகிறார்கள். அந்தவகையில் தற்ப்போது பிரபல மலையாள நடிகையான ஷர்மிளா மல்லுவுட்டை சல்லி சலியாக உடைத்து பல ரகசிய விஷயங்களை கூறிய அம்பலமாக்கி இருக்கிறார்.

hema-commision

நடிகை ஷர்மிளா மலையாளத்தில் 30-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான ஹீரோயினாக ஒரு காலகட்டத்தில் வலம் வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் சமீபத்தை பேட்டி ஒன்றில் இது பற்றி பேசிய அவர் மலையாள சினிமா மக்கள் தான் என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்தார்கள்.

ஆனால் அதே சினிமாவில் நான் சில மோசமான… கசப்பான அனுபவங்களையும் சந்தித்ததுண்டு. ஆம், கடை திறப்பு விழாவிற்கு நடிகைகளை கூப்பிடுவார்கள். அதற்காக இவ்வளவு சம்பளம் கொடுக்கிறோம் என பேரம் பேசிவிட்டு கூப்பிட்டு சென்று அங்கு கடை ஓனருடன் படுக்க கேட்பார்கள்.

hema commitee

அதற்கு ஒப்புக் கொண்டால் தாராளமாக பணத்தை வாரி தருவார்கள். இல்லை என்றால் பேசிய பேமெண்ட்டே கிடைக்காது. அதேபோல் சினிமாவில் கிட்டத்தட்ட 80 சதவீதம் படுத்தால் தான் பட வாய்ப்பு கிடைக்கும் என நடிகை ஷர்மிளா வெளிப்படையாக பகிரங்கமாக கூறி அதிரவைத்துள்ளார்.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!