காங்கிரஸ் கட்சியில் இணைய விஜய்க்கு அழைப்பு? ட்விஸ்ட் வைத்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி!

Author: Udayachandran RadhaKrishnan
6 September 2024, 2:39 pm

பிரதமர் மோடி அறிவித்த ஒரே நாடு ஒரே தேர்தல், வக்பு வாரிய திருத்த சட்டம் உள்ளிட்ட 4 அறிவிப்புகளையும் நிறைவேற்ற முடியாமல் கூட்டணிக் கட்சியினரே ஆன சந்திரபாபு நாயுடு, நித்திஷ் குமார் ஆகியோர் எதிர்க்கின்றனர்.

தற்போது மோடி சொல்வதெல்லாம் நிறைவேற்ற முடியவில்லை. சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் கூட்டணியில் தொங்கு ஆட்சியாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக மோடி அரசு 5 ஆண்டுகள் நடைபெறாது. எனவே அவர் ராஜினாமா செய்து விட்டு போகலாம்.

தமிழ்நாட்டின் கல்வி கொள்கையை ஆளுநர் எதிர்ப்பது முறையில். 1000 ரவி வந்தாலும் தமிழ்நாடு மக்களை ஏமாற்ற முடியாது. வெள்ள நிவாரண, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு நிதியை தமிழ்நாட்டுக்கு கொடுக்காமல் மத்திய அரசு வஞ்சிக்கிறது.

நடிகர் விஜய் கட்சி துவங்கியுள்ளார் அதற்கு வாழ்த்துக்கள், கடந்த காலங்களில் சினிமா நடிகர்களால் துவங்கப்பட்ட கட்சிகளின் நிலை எப்படி இருக்கிறது என்று அனைவரும் அறிந்ததே.,

விஜய் எந்த கட்சியுடன் கூட்டணிக்கு செல்வார் என்பது அவருக்கு தான் தெரியும்., அவரை காங்கிரஸ் கட்சியில் இணைக்க அழைப்பு விடுக்க அதிகாரம் எனக்கு இல்லை. அடிப்படையில் நான் ஒரு காங்கிரஸ் கட்சியின் தொண்டன் மட்டுமே என பேசினார்.

  • five star creations report against dhanush viral on internet தனுஷிற்கு எதிராக அறிக்கை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்! மேலிடத்தில் இருந்த வந்த உத்தரவு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…