விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: தெறிக்கவிடும் “வேட்டையன்” அப்டேட் – கொண்டாட்டத்தில் சூப்பர் ஸ்டார் ஃபேன்ஸ்!

Author:
7 September 2024, 1:56 pm

ஜெய் பீம் படத்தின் இயக்குனரான ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையின் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் 10ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

vettaiyan

பிரம்மாண்ட நிறுவனம் லைக்கா நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் உடன் சேர்ந்து அமிதாப் பச்சன்,மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்ட பல நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசை அமைத்திருக்கிறார் .

இந்த திரைப்படம் முதல் அறிவிப்பில் இருந்து ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்து விட்டது. இந்த நிலையில் படத்தின் முதலாவது பாடலான மனசிலாயோ பாடல் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளியாகி ரசிகர்களை இன்ப மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

vettaiyan single

அதாவது வருகிற செப்டம்பர் 9ம் தேதி நாளை மறுநாள் இந்த படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் என பட குழு அதிகாரப்பூர்வமாக வேட்டையன் படத்தின் போஸ்டருடன் வெளியிட்டு இருக்கிறார்கள். இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செம கெத்தாக கோடாலி ஒன்றை வைத்துக்கொண்டு வெறித்தனமான லுக்கில் இருக்கிறார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?