அரசு புத்தக விழாவில் ஒலித்த பக்தி பாடல்… சாமி வந்து ஆடிய மாணவிகள்.. உறைந்து போன ஆசிரியர்கள்!
Author: Udayachandran RadhaKrishnan7 September 2024, 2:59 pm
மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தகத் திருவிழா இன்று தொடங்கிய நிலையில் திருவிழாவின் தொடக்க நிகழ்வாக கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது பக்தி பாடல்கள் ஒலிக்கப்பட்ட போது அங்கு கூடியிருந்த பள்ளி மாணவிகள் சாமி ஆடத் தொடங்கி மயங்கி விழுந்தனர் இதனை அடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில் பல்வேறு தரப்பினர் அதிகாரிகளிடம் நேரில் சென்று வாக்குவாதம்.
அரசு விழாவில் பக்தி பாடல்கள் ஒலிபரப்பப்பட்டதால் பள்ளி மாணவிகள் சாமி வந்து ஆடி மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து மதுரை மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், “நாட்டுப்புற பாடலான கருப்பசாமி பாடல் நாட்டுப்புற கலைஞர்களால் பாடப்பட்டது. பாடலுக்கு உணர்ச்சி வசப்பட்டு சில மாணவிகள் ஆடினர். சிலர் நடனமாடினர். பாடல் ஒலி பாடல் ஒலிபரப்பப்பட்டதில் எந்த விதிமீறலும் இல்லை. நிகழ்ச்சி முறையாகவே நடத்தப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.