பெண்களின் ஆரோக்கியத்தில் மாயாஜாலம் செய்யும் முருங்கை கீரை!!!

Author: Hemalatha Ramkumar
7 September 2024, 4:57 pm

ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறையுடன் எச்சரிக்கையாக இருப்பவர்கள் நிச்சயமாக முருங்கைக்கீரை பற்றி அறிந்து இருப்பார்கள். முருங்கை மரத்தின் இலை, காய், பட்டை, பூக்கள் முதலிய அனைத்தும் நமது ஆரோக்கியத்திற்கு எக்கச்சக்கமான நன்மைகளை அளிக்கக் கூடியது. முருங்கைக் கீரையில் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் அவசியமான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்திருக்கிறது. முருங்கைக்கீரையானது குறிப்பாக பெண்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது. தாய்ப்பால் சுரப்பை ஊக்குவிப்பது முதல் மாதவிடாய் வலியில் இருந்து நிவாரணம் அளிப்பது வரை முருங்கைக்கீரை பல்வேறு சக்தி வாய்ந்த பலன்களை தருகிறது. இந்த பதிவில் அந்த பலன்கள் குறித்து விளக்கமாக தெரிந்து கொள்ளலாம்.

தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கிறது
பல வருடங்களுக்கு முருங்கைக்கீரை தாய்ப்பால் சுரப்பை அதிகரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. முருங்கைக்கீரை பொட்டாசியம், இரும்புச்சத்து, கால்சியம்,, வைட்டமின் சி, வைட்டமின் பி, பீட்டா கரோட்டின் மற்றும் அமினோ ஆசிட் போன்ற ஊட்டச்சத்துக்களால் நிறைந்துள்ளது. இது தாய்ப்பால் சுரப்பை ஊக்குவிக்க கூடிய ஊட்டச்சத்துக்கள்.

உடல் எடையை கட்டுப்படுத்துவதற்கு உதவுகிறது
சரியான உடல் எடையை பராமரிப்பது என்பது பல பெண்களுக்கு தற்போது சவாலான ஒரு காரியமாக இருக்கிறது. ஏனெனில் ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு மெதுவான வளர்சிதை மாற்றம் ஏற்படுகிறது. முருங்கைக்கீரை கொழுப்புகளை உடைத்து பெண்களில் உடல் எடையை சீராக பராமரிப்பதற்கு ஆதரவளிக்கிறது. மேலும் முருங்கைக் கீரையில் அதிகம் இருக்கும் உணவு நார்சத்து மற்றும் மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் ஆகிய இரண்டும் இணைந்து ஆரோக்கியமான வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவித்து பசியை கட்டுப்படுத்துகிறது.

மாதவிடாய் வலியில் இருந்து நிவாரணம் அளிக்கிறது
மாதவிடாய் வலி என்பது பெரும்பாலான பெண்களுக்கு இருக்கக்கூடிய ஒரு பொதுவான பிரச்சனையாகும். பல பெண்கள் இதற்கு பெயின்கில்லர்களை நாடுகின்றனர். இது பெண்களின் ஆரோக்கியத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தலாம். முருங்கைக் கீரையில் உள்ள வீக்கம் எதிர்ப்பு பண்புகள் வலி நிவாரணத்தில் உதவுகிறது. இதற்கு மாதவிடாய் வலி ஏற்படும் பொழுது முருங்கைக் கீரையை தேநீராகவோ அல்லது பொடியாகவும் சாப்பிடலாம்.

  • அமரன் திரைப்படத்திற்கு டப்பிங் கொடுத்த பிரபல ஹீரோக்கள்..வீடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்த இயக்குனர்..!
  • Views: - 278

    0

    0