புத்தக விழாவில் பள்ளி மாணவிகள் நடனமாடியதை பற்றி கேள்வி கேட்ட நிருபர்கள்… ஆவேசமாக பேசிய அமைச்சர்!

Author: Udayachandran RadhaKrishnan
7 September 2024, 6:34 pm

மாமதுரை என்பது எல்லா சமுதாயமும் எல்லோரும் இருக்கக்கூடியது நமது முதல்வரும் நமது திராவிட மாடல் அதற்குள் அடங்கும் மதுரையில் வணிகவரி மற்றும் பத்திர துறை அமைச்சர் மூர்த்தி பேட்டி மதுரையில்வரும் 9-ஆம் தேதி மதுரை ஒத்தக்கடை பகுதியில் உள்ள தனியார் திடலில் 22-ஆயிரத்திற்கும் மேற்பட்ட நயர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் நடைபெற உள்ளது.

அதற்கான ஏற்பாடுகள் நடைபெறும் இடத்தை தமிழக வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மாவட்ட ஆட்சியர் சங்கீதா மாநகராட்சி ஆணையாளர் தினேஷ் குமார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பல பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி கூறுகையில். மனசாட்சியுடன் சொல்லுங்கள் நானும் ஆட்சியரும் பிரம்மாதமாக புத்தக கண்காட்சியை நடத்தினோம்.

ஆர்வக்கோளாறில் பள்ளி மாணவிகள் விளையாடியதை பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது இதுதான் சொருகலான கேள்வி.?

இது கிராமிய பாட்டு தான் நானும் ஆட்சியரும் மேயரும் மாநகராட்சி கமிஷனரும் இருந்தோம். நாங்கள் சென்ற பிறகு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

கலை நிகழ்ச்சிகளில் கிராம பாடல்கள் தான் ஒளிபரப்பப்பட்டது இதில் எந்த விதமும் இல்லை பத்திரிகை தொலைக்காட்சி நண்பர்கள் மதுரைக்கு பெருமை சேர்க்கும் வகையில் தான் திட்டங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.

வழங்க இருக்கின்ற நலத்திட்டத்தில் மக்கள் என்ற முறையில் எல்லா மக்களுக்கும் வழங்கப்படுகிறது யாரோ ஒருவர் சொல்வதற்காக தவறான செய்திகளை சொல்லக்கூடாது மதுரை அதற்கு அப்பாற்பட்டது. மாமதுரை என்பது எல்லா சமுதாயமும் எல்லோரும் இருக்கக்கூடியது நமது முதல்வரும் நமது திராவிட மாடல் அதற்குள் அடங்கும்

நாளை நடைபெற உள்ள நலத்திட்ட உதவிகள் கூட சாதி சமயத்திற்கு அப்பாற்பட்டு அதிகாரிகள் ஆய்விற்கு பிறகு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்காக நலத்திட்ட உதவிக்கு வழங்கப்படுகிறது.

உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கைகளால் வழங்கக்கூடிய பட்டாவில் எந்த ஒரு அரசியல் தலையிடும் இல்லாமல் நேர்மையான முறையில் வழங்கப்பட உள்ளது.

எல்லா திட்டங்களையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பார் ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்படுகிறது.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?