இது என்னோட சீட்… இருக்கையில் வேறொருவர் அமர்ந்ததால் பொள்ளாச்சி பேருந்தை வழிமறித்து பெண் ஆர்ப்பாட்டம்!

Author: Udayachandran RadhaKrishnan
9 September 2024, 10:29 am

பொள்ளாச்சி பழைய பேருந்து நிலையம் கோவை செல்லும் பேருந்துகள் 70க்கு மேல் அரசு பேருந்து, தனியார் பேருந்துகள் இயங்கி வருகிறது.

இதில் காலை ஏழு மணி முதல் 10 மணி வரை கோவை செல்லும் கல்லூரி மாணவர்கள் வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமான தனியார் பேருந்து பயணிக்கின்றனர்.

Pollachi Bus

தனியார் பேருந்து ஜெய் ஒன்பது மணி அளவில் கோவை தினசரி சென்று வருகிறது இதில் பயணிக்கும் பெண் ஒருவர் தான் இருக்கும் இடத்தில் வேறொரு பயணி உட்கார்ந்து இருந்ததால் ஆத்திரமான பெண் பஸ் குறுக்கே நிப்பாட்டி தனக்கு உட்கார சீட்டு வேண்டுமென ஆர்ப்பாட்டம் செய்ததாக கூறப்படுகின்றது.

தகவல் அறிந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தி வேற பேருந்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டார்.

திடீரென பெண் ஒருவர் குறுக்கே நின்று பேருந்து நிப்பாட்டிய சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

  • tamannaah dialogue in odela 2 trailer trolled by netizens பூமாதா, கோமாதா… படத்தில் பேசிய வசனத்தால் ட்ரோலுக்குள்ளாகும் தமன்னா…