ஹிப் ஹாப் ஆதி இசை நிகழ்ச்சியில் மோதல்… மாணவர்கள் கைக்கலப்பு : வெளியான வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
9 September 2024, 1:45 pm

கோவை கொடிசியா மைதானத்தில் நேற்று ஹிப் ஹாப் தமிழாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது இந்த இசை நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஹிப் ஹாப் தமிழா பாட்டு பாட்டு கொண்டிருந்தபோது மாணவர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது. அதன் பிறகு காவல்துறையினர் அங்கு வந்து கைகலப்பில் ஈடுபட்ட மாணவர்களை வெளியேற்றினர்.

மேலும் ஹிப்பாப் தமிழா இசை நிகழ்ச்சி பாதுகாப்பு குறைபாடுகள் மிகவும் குறைவாக இருந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர் கல்லூரி மாணவர்கள் இதுபோன்ற இசை நிகழ்ச்சியில் அதிக ம் கூடுவதால் பிரச்சனைகள் அதிகரித்து உள்ளதாக பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டில் இசை நிகழ்ச்சியை போல 300 அடி ரேம்ப் அமைத்து ஹிப் ஹாப் தமிழா அதில் நடந்து வந்து பாட்டு பாடி நடனமாடியது குறிப்பிடத்தக்கது.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!