தேர்தல் ஆணையம் பச்சைக் கொடி காட்டியும் செக் வைக்கும் காவல்துறை.. 33 நிபந்தனைகள் : சிக்கலில் விஜய்.!

Author: Udayachandran RadhaKrishnan
9 September 2024, 2:04 pm

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து வரும் விஜய், அரசியல் கட்சியை துவங்கினார். தமிழக வெற்றிக்கழகம் என அறிவித்த பின்னர் கட்சியின் கொடி மற்றும் பாடலையும் வெளியிட்டு தமிழகத்தை மட்டுமல்ல இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தார்.

தனது முதல் அரசியல் மாநாட்டிற்கான தேதியையும் அறிவித்தார். இதனையடுத்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இடம் தேர்வு நடைபெற்ற நிலையில் விக்கிரவாண்டியில் இடம் உறுதி செய்யப்பட்டது.

ஆனால் மாநாடு நடத்த அனுமதி வேண்டி காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்ட பின், பலகட்ட ஆலோசனைக்கு பிறகு 21 கேள்விகள் கேட்டு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியது.

21 கேள்விகளுக்கும் தவெக நிர்வாகிகள் தங்கள் வழக்கறிஞர் அணியோடு ஆலோசனை நடத்தி 21 கேள்விகளுக்கான பதிலையும் காவல்துறையிடம் வழங்கினர்.

இதையடுத்து நேற்று தேர்தல் ஆணையம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அங்கீகாரமும் அளித்தது. இதனாடல தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உற்சாகமடைந்தனர். மேலும் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதியும் வழங்கியது.

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு 33 நிபந்தனைகளை மாமவட்ட காவல்துறை விதித்துள்ளது.

  1. விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடைபெறவுள்ள மாநாட்டில் மேடை, மாநாட்டின் தொண்டர்கள் அமரும் இடம், வாகனங்கள் நிறுத்தும் இடம் ஆகியவற்றின் வரைபடங்களை சமர்பிக்க வேண்டும்.
  2. தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாட்டிற்கு அனுமதி கேட்டு கொடுக்கப்பட்ட மனுவில் ஒரு லட்டத்தில் 50 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பதில் அளித்துள்ள மனுவில் 50ஆயிரம் பேர் வருவார்கள் என மாறுபட்ட தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம் என கேட்கப்பட்டுள்ளது. மேலும் மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடிய 50ஆயிரம் பேருக்கு மட்டுமே பாதுகாப்பு கொடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
  3. மாநாட்டிற்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்பாக தவெக சார்பாக தரப்பட்டுள்ள பதிலின் படி 20ஆயிரம் பேர் தான் வர முடியும் நிலை உள்ளது. அப்படி இருக்கும் நிலையில் ஏன் இந்த எண்ணிக்கையை கொடுத்தீர்கள்.
  4. மாநாடு நடைபெறும் வளாகம் குண்டும் குழியாக காணப்படுகிறது. இதனால் அதிகளவு வாகனங்கள் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.
  5. மாநாடு 2 மணி என கூறப்பட்டுள்ளது. 1.30 மணிக்கே மாநாட்டிற்குள் தொண்டர்களை வந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்
  6. மாநாட்டிற்கு வரும் அனைவருக்கும் குடிநீர், உணவு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
  7. மாநாட்டு மேடை, மாநாட்டிற்கு வருபவர்கள் அமரும் இடம் தவிர மற்ற இடங்களை வாகன நிறுத்துவதற்கு வசதிக்கு பயன்படுத்த வேண்டும்.
  8. மாநாட்டு மேடை நடைபெறும் இடத்திற்கும் வாகன நிறுத்தும் இடத்திற்கும் இடையே தடுப்பு அமைக்க வேண்டும்.
  9. தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மாநாட்டிற்கு வந்து செல்லக்கூடிய வழியில் இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.
  10. விஜய் மாநாட்டிற்கு வருபவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.
  11. மாநாடு நடைபெறும் பகுதியில் ரயில்வே தண்டவாளம், தேசிய நெடுஞ்சாலை மற்றும் 6 கிணறுகள் உள்ளது எனவே அந்த பகுதிக்கு மக்கள் செல்லாதவாறு தடுப்புகள் அமைக்க வேண்டும்.
  12. வாகன நிறுத்துமிடத்தில் இருந்து மாநாட்டு இடத்திற்கு வரும் மக்களுக்கு பாதுகாப்பிற்கு, தன்னார்வலரை பயன்படுத்தவும்.
  13. கொடி, அலங்கார வளைவு, பேனர் போன்றவை கட்டுவதால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. முடிந்த அளவிற்கு அதனை தவிர்க்க வேண்டும்.
  14. மழை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதால் மாநாடு இடத்தில் முன்னேற்றப்பாட்டிற்கு நடவடிக்கைகளை எடுக்க தயாராக இருக்க வேண்டும்.
  15. பொதுப்பணித் துறை பொறியாளரிடம் மாநாட்டின் மேடையின் உறுதித்தன்மையை பெற வேண்டும்.
  16. மாநாட்டிற்கு வரும் விஐபிக்கள் மற்றும் விஜய்யுடன் வருபவர்களுக்கு யார் யாருக்கு சிறப்பு அனுமதி பாஸ் வழங்கப்படுகிறது? போன்ற விவரங்களை காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.
  17. மாநாட்டு எடுக்கப்படும் மின்சாரம் தொடர்பாக மின் பொறியாளர்களிடம் பாதுகாப்புச் சான்றிதழ் பெற வேண்டும்,
  18. எல்இடி அமைக்க வேண்டும். சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்கவும் வேண்டும்.
  19. மாநாட்டில் தீயணைப்பு, மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைக்கான வாகனங்களை அங்கு அனுமதி பெற்று நிறுத்தப்பட வேண்டும்.
  20. மாநாடு நடைபெறும் பகுதிக்குவருபவர்கள் தேசிய நெடுஞ்சாலைக்கு வராத வகையில் தடுப்புகளை அமைக்க வேண்டும்.
  21. மாநாட்டிற்கு வரும் கர்ப்பிணிகள், முதியோர்களுக்கு தனி இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 33 நிபந்தனைகளோடு மாநாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • five star creations report against dhanush viral on internet தனுஷிற்கு எதிராக அறிக்கை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்! மேலிடத்தில் இருந்த வந்த உத்தரவு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…