தளபதி விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா,மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள்.
மேலும் இப்படத்தில் நடிகர் பிரசாந்த், மைக் மோகன், நடிகை லைலா உள்ளிட்ட நட்சத்திர பிரபலங்கள் நடித்திருந்தார்கள். இப்படம் வெளியாகி தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் சேர்ந்து “மட்ட” என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருப்பார் திரிஷா.
இந்த பாடலுக்கு அவர் கிட்டத்தட்ட ரூ.80 லட்சம் வரை சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. வெறும் 5 நிமிட பாடலுக்கு 80 லட்சம் வரை சம்பளம் வாங்கி இருக்கும் திரிஷாவின் இந்த சம்பள விஷயம் சமூக வலைதளங்களில் பெரும் அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
முன்னதாக இதுவரை எந்த ஒரு பாடத்திற்கும் ஒரே ஒரு பாடலுக்கு திரிஷா குத்தாட்டம் போட்டதே இல்லை. விஜய்யின் கோட் திரைப்படத்தில் தான் இது நிகழ்ந்துள்ளது என்பதே இதற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது.
அதில் மஞ்சள் நிற புடவை கட்டிக்கொண்டு இளம் வயது விஜய்யுடன் நடனமாடியிருந்தார் நடிகை திரிஷா. அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்த ஒரே ஒரு பாடலின் மூலம் திரிஷா மீண்டும் வெகுஜன ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
முன்னதாக அவர் 96 திரைப்படத்தில் மஞ்சள் கலர் சுடிதார் அணிந்து வந்து எல்லோரது மனதையும் கவர்ந்து விட்டார். தற்போது மீண்டும் மஞ்சள் நிற சேலையில் கோட் படத்தில் ஆட்டம் போட்டு இருக்கும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக… இந்த கலர் திரிஷாவுக்கு செம லக் போல… அதனால் தான் இந்த கலர்ல டிரஸ் போட்டாவே அது பாடலாக இருந்தாலும் படமாக இருந்தாலும் சூப்பர் ஹிட் அடித்துவிடுகிறது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.