கேவிட்டி வராம இருக்க இத பண்ணாலே போதும்!!!

Author: Hemalatha Ramkumar
9 September 2024, 3:51 pm

ஏதாவது இனிப்பாகவோ அல்லது ஜில்லென்று குடிக்கும் பொழுது உங்கள் பற்களில் வலி ஏற்படுகிறதா? அப்படி என்றால் அது கேவிட்டிக்கான அறிகுறியாக இருக்கலாம். கேவிட்டி என்பது உங்கள் பற்களில் ஏற்படும் சிறிய துளைகள். இது பாக்டீரியா காரணமாக ஏற்படுகிறது. இது சர்க்கரைகளை அமிலங்களாக பாக்டீரியாக்கள் உடைக்கும் பொழுது ஏற்படுகிறது. இந்த அமிலங்கள் உங்களுடைய பற்களின் பாதுகாப்பு எனாமலை சாப்பிட்டுவிடும். இதனால் பல் வலி, சென்சிட்டிவிட்டி மற்றும் ஈறு பிரச்சனைகள் ஏற்படலாம். இதனை ஆரம்ப கட்டத்தில் கவனிக்காவிட்டால் கேவிட்டி, தொற்றுகள் அல்லது பற்கள் விழுவது போன்ற மிகப் பெரிய பிரச்சனைகளை ஏற்படலாம். எனவே இந்த பதிவில் உங்களுடைய பற்களை கேவிட்டியிலிருந்து எப்படி பாதுகாப்பது மற்றும் ஈறுகளை எப்படி கவனித்துக் கொள்வது என்பதற்கான சில குறிப்புகளை பார்க்கலாம். 

ஃப்ளூரைடு டூத் பேஸ்ட்டை பயன்படுத்துங்கள்

கேவிட்டியை சமாளிப்பதற்கான மிகவும் முக்கியமான வழிகளில் ஒன்று உங்களுடைய பற்களை நீங்கள் இரண்டு முறை துலக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 நிமிடங்கள் சரியான முறையில் பற்களை துவக்குங்கள். உங்கள் பற்களை துலக்குவதற்கு ஃப்ளூரைடு டூத் பேஸ்ட் பயன்படுத்தவும். இது எனாமலை வலுப்படுத்துவதற்கு உதவும். மேலும் கேவிட்டியை ஏற்படுவதை தவிர்க்கும். 

தினமும் ஃப்ளாசிங் செய்யவும் 

பற்களை துலக்கினால் மட்டும் போதாது. உங்களுடைய நாக்கு மற்றும் பற்களின் இடுக்குகளை சுத்தம் செய்வது அவசியம். இவ்வாறு செய்வது ஆரோக்கியமான ஈறுகளை பராமரிப்பதற்கு உதவும். வலுவான ஆன்டி பாக்டீரியல் பண்புகள் கொண்ட மவுத்வாஷ் பயன்படுத்தலாம். 

சர்க்கரை இல்லாத கம் பயன்படுத்தவும் 

உமிழ் நீர் உற்பத்தியை தூண்டுவதற்கு சர்க்கரை இல்லாத சூயிங்கம்மை நீங்கள் சாப்பிடலாம். உமிழ்நீர் என்பது பற்களில் கேவிட்டியை ஏற்படுவதை தடுக்க உதவும் இயற்கை பாதுகாப்பு. பாக்டீரியாக்கள் ஆபத்து நிறைந்த அமிலங்கள் உற்பத்தி செய்யும் திறனை சர்க்கரை இல்லாத சுவிங்கம் தடுக்க உதவுகிறது. 

போதுமான அளவு தண்ணீர் பருகுதல் நல்ல வாய் ஆரோக்கியத்தை பராமரிக்க தினமும் நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும். வாயில் உள்ள உணவுத்துகள்கள் மற்றும் பாக்டீரியாக்களை வெளியிடுவதற்கு தண்ணீர் உதவுகிறது. மேலும் தண்ணீர் உங்கள் வாயை ஈரப்பதத்தோடு வைக்கவும், உமிழ்நீர் உற்பத்தியை ஊக்குவிக்கவும் தேவை. 

வைட்டமின் டி அவசியம்

வைட்டமின் டி உங்களுடைய வாய் ஆரோக்கியம் உட்பட ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் அவசியமானது. இது வலுவான பற்கள் மற்றும்  எலும்புகளை பராமரிப்பதற்கு அவசியமான கால்சியம் மற்றும் பாஸ்பேட் ஆகிய இரண்டு மினரல்கள் உறிஞ்சப்படுவதற்கு உதவுகிறது. வைட்டமின் டி குறைபாடு எனாமலை வலுவிழக்க செய்யலாம். இதனால் கேவிட்டி ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. 

சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்கவும் கேவிட்டியை பொறுத்தவரை அதற்கு முக்கியமான காரணமாக அமைவது சர்க்கரை மற்றும் அமிலங்கள். உங்கள் வாயில் உள்ள பாக்டீரியா சர்க்கரையை சாப்பிட்டு அமிலங்களை உற்பத்தி செய்து அதன் விளைவாக எனாமலை அரிக்கும். எனவே முடிந்த அளவு சாக்லேட், சோடா மற்றும் பிற சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்டுள்ள தின்பண்டங்களை தவிர்க்கவும். ஒருவேளை நீங்கள் இனிப்பு சாப்பிட்டால் அதனை சாப்பிட்டதற்கு பிறகு வாயை கொப்பளிக்கவும் அல்லது 30 நிமிடங்கள் கழித்து பற்களை துலக்கவும்.

ஆயில் புல்லிங் 

பற்களை பாதுகாப்பதற்கு பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய முறை இது. இதற்கு தேங்காய் அல்லது நல்லெண்ணையை வாயில் ஊற்றி அதனை 10 முதல் 20 நிமிடங்கள் கொப்பளித்து துப்ப வேண்டும். இது பாக்டீரியாக்களை அகற்றி வாய் சுகாதாரத்தை பராமரிக்க உதவும். ஆனால் பல் துலக்குதல் மற்றும் ஃப்ளாசிங் செய்வதற்கு பதிலாக இதனை நீங்கள் செய்யக்கூடாது. 

அடிக்கடி பல் மருத்துவரை சந்திக்கவும் 

வழக்கமான டென்டல் செக்கப் செய்து கொள்வது அவசியம். பெரும்பாலான நபர்கள் இதனை செய்ய தவறி விடுகின்றனர். அவ்வாறு நீங்கள் பல் மருத்துவமரை சந்திக்கும் பொழுது அவர் உங்களுடைய பற்களை சுத்தம் செய்து அதில் உள்ள பிளேக்கை அகற்றுவார். இதனை பல் துலக்குவதன் மூலமாகவோ அல்லது ஃபிளாசிங் செய்வதன் மூலமாக உங்களால் செய்ய இயலாது. எனவே ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒரு முறை உங்கள் பல் மருத்துவரை சந்திக்கவும்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி