ஆளுநர் பங்கேற்றதால் புறக்கணித்த அமைச்சர் : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பரபர!

Author: Udayachandran RadhaKrishnan
9 செப்டம்பர் 2024, 4:08 மணி
graduation
Quick Share

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 44-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.இந்நிகழ்வில், பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார்.

இதில் சிறப்பு விருந்தினராக மத்திய அரசின் பயிர் இரகங்கள் மற்றும் உழவர் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தலைவர் முனைவர். திரிலோச்சன் மஹாபத்ரா கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரையாற்றினார்.இந்த பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 9,526 மாணவர்கள் இளமறிவியல், முதுநிலை பட்டமேற்படிப்பு மற்றும் முனைவர் பிரிவில் பட்டம் பெற்றனர்.

இதில் 3,415 மாணவர்கள் நேரடியாகவும், உறுப்பு மற்றும் இணைப்பு கல்லூரிகளில் இருந்து 6,111 மாணவர்கள் தபால் மூலமாகவும் பட்டங்களைப் பெற்றனர்.

இந்த பட்டமளிப்பு விழாவில் வேளாண்மை பல்கலை கழக இணைவேந்தரும், வேளாண்மை துறை அமைச்சருமான எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் பங்கேற்கவில்லை.

கடந்த ஆண்டு நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிலும் இணைவேந்தரான எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் பங்கேற்காமல் புறக்கணித்தார்.தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து கருத்து மோதல் இருந்து வரும் நிலையில் ஆளுநர் பங்கேற்கும் நிகழ்வுகளில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்காமல் புறக்கணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

  • Palani பழனி கோவில் ராஜகோபுரம் சேதம் : ஆபத்து பக்தர்களுக்கா..? அரசுக்கா.?
  • Views: - 213

    0

    0