தமிழ் சினிமாவில் பிரபல நட்சத்திர நடிகராக பார்க்கப்பட்டு வருபவர் தான் நடிகர் ஜெயம் ரவி. இவர் ஜெயம் திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமாகி தொடர்ச்சியாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து இன்று முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பிடித்து வைத்திருக்கிறார் .
இதனிடையே பிரபல தயாரிப்பாளரான சுஜாதாவின் மகள் ஆர்த்தி என்பவரை ஜெயம் ரவி காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரவ் , அயான் என இரண்டு பிள்ளைகள் இருக்கும் சமயத்தில் கடந்த சில நாட்களாக ஜெயம்ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப்போவதாக வதந்திகள் வெளியாகிக்கொண்டு இருந்தன.
ஆனால், இருவருமே இதை உறுதி செய்யாமல் மௌனம் காத்து வந்த நிலையில் நேற்று ஜெயம் ரவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் பேசு பொருளாகியுள்ளது. இந்த நிலையில் இவர்களின் விவாகரத்துக்கான காரணம் என்னவாக இருக்கும்? என பல கோணங்களில் ரசிகர்கள் அலசி ஆராய்ந்து வருகிறார்கள்.
அந்த வகையில் நடிகர் ஜெயம் ரவியின் குடும்ப விஷயத்திற்குள்ளும் நடிகர் தனுஷ் புகுந்து விட்டாரா? என கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. ஆம், கடந்து சில நாட்களாக நட்சத்திர பிரபலங்களின் தொடர் விவாகரத்துக்கு நடிகர் தனுஷ் காரணமாக இருந்து வருகிறார் என குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
அப்படித்தான் விஜய் அமலாபால் விவகாரத்தில் நடிகர் தனுஷ் உள்ளே புகுந்து அவர்கள் வாழ்க்கையில் விளையாடி அவர்களின் விவாகரத்துக்கு காரணமாகவும் ஆகிவிட்டார். அதன் பிறகு ஏ. எல் விஜய் அமலா பாலை விவாகரத்து செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக பிரபல இசையமைப்பாளர் ஆன விஜய் யேசுதாஸ் மற்றும் அவரது மனைவியின் விவாகரத்துக்கும் நடிகர் தனுஷ் தான் காரணம் என கூறப்பட்டது. காரணம் வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் தனுஷ் நடித்துக் கொண்டிருந்தபோது அந்த படத்தில் வில்லனாக நடித்திருந்த அமுல் பேபி உடன் விஜய் யேசுதாஸின் மனைவி தகாத உறவு வைத்திருந்ததாகவும் அதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது தனுஷ் தான் என கூறப்பட்டது .
இதனால் அவர்களின் விவாகரத்துக்கும் தனுஷே காரணமாக அமைந்தார். தொடர்ந்து அடுத்ததாக ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவியின் விவாகரத்துக்கும் நடிகர் தனுஷ் முக்கிய புள்ளியாக கருதப்பட்டிருந்தார். இந்த நிலையில் தொடர்ச்சியாக எல்லோரும் விவாகரத்து. விஷயத்திலும் தனுஷ் ஈடுபட்டிருக்கிறார் என்ற செய்தி வதந்தியாக தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது ரசிகர்கள் ஆர்த்தி மற்றும் ஜெயம் ரவியின் வாழ்க்கையிலும் தனுஷ் புகுந்து விளையாடி விட்டாரா? இதனால்தான் அவர்களுக்கும் விவாகரத்து நேர்ந்திருக்கிறதா? என ஒரு கேள்வி ரசிகர்கள் வட்டாரத்தில் தற்போது எழுந்திருக்கிறது. இருந்தாலும் இதை தனுஷ் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.