அத்தை வீட்டுக்கு வந்த சிறுமிக்கு அடிக்கடி ‘டார்ச்சர்’ : இளைஞரால் 8 மாத கர்ப்பிணியான 9ம் வகுப்பு மாணவி..!
Author: Udayachandran RadhaKrishnan10 September 2024, 12:05 pm
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த சிறுமி தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
சங்கராபுரம் அருகே உள்ள கடுவனூர் கிராமத்தில் பள்ளி மாணவியின் தந்தையின் அக்கா ஜமுனா என்பவரின் வீட்டிற்கு அடிக்கடி பள்ளி மாணவி சென்று வந்த நிலையில் ஜமுனாவின் மகன் பாலசக்தி (22) என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதை பயன்படுத்தி பள்ளி மாணவியை அழைத்து சென்று கடந்த 2023 ஆம் ஆண்டு அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்த நிலையில் பாலசக்தி இருந்ததாக கூறப்படுகிறது.
தற்பொழுது பள்ளி மாணவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தது தெரிய வந்ததால் அதிர்ச்சி அடைந்த தாய் மணிமேகலை திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து இளைஞர் சிறையில் அடைத்தனர்.