டெக்னாலஜி வளர்ந்து வந்த வேகத்தில் முகமறியாத பலர் ஹீரோ ஹீரோயின்கள் ரேஞ்சுக்கு பிரபலமாகி தனக்கென தனி அடையாளத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த லிஸ்டில் இருப்பவர் தான் டிக் டாக் இலக்கியா.
டிக் டாக் ஆப் மூலம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் தான் இலக்கியா. இவர் டிக் டாக்கில் கிளாமர் லுக்கில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் படுமோசமான ஆபாச நடனம் உள்ளிட்டவற்றை தொடர்ச்சியாக சமூக வலைதளங்களை வெளியிட்டு வந்ததன் மூலம் மிகக் குறுகிய காலத்திலே பேமஸானார்.
கிட்டத்தட்ட ஆபாச நடிகை ரேஞ்சுக்கு இணையாக இவரது கவர்ச்சி தென்படும். இதனாலே இவருக்கு சினிமா வாய்ப்பு தேடி வர ஆரம்பித்தது. ஆரம்பத்தில் சினிமா வாய்ப்புகள் கிடைத்தாலும் அந்த வாய்ப்புகள் எல்லாம் தன்னை படுகைக்கு அழைக்கும் படியாக தான் இருந்தது என அவரே முன்னொரு பேட்டியில் மிகுந்த வேதனையோடு பேசி இருந்தார் .
இந்த நிலையில் ஷகீலா உடன் கலந்து கொண்ட நேர்காணலில் பேசிய இலக்கியா நான் பெரும்பாலும் தனியாக தான் என்னுடைய வாழ்க்கை நகர்த்திக் கொண்டிருக்கிறேன். தனியாக இருக்கும்போது பல விஷயங்களை நினைத்து நான் கவலைப்பட்டு இருக்கிறேன். ஆனால், நான் கடந்து வந்த வாழ்க்கை எனக்கு பல விஷயங்களை சொல்லிக் கொடுத்து விட்டது.
அதனால் எதையும் தாங்கும் மனப்பான்மையில் நான் இப்போது வந்து விட்டேன். பெரிதாக எதற்கும் நான் அழுவதில்லை, கவலைப்படுவதில்லை. எது நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற ஒரு மனநிலைக்கு வந்து விட்டேன். ஆரம்பத்தில் தான் சினிமா வாய்ப்புக்காக அலைந்து கொண்டிருந்தேன். ஆனால், தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காதால் போதும்டா சாமி என்ற மனநிலைக்கு வந்துள்ளேன்.
இருப்பதை வைத்து பார்த்துக் கொள்ளலாம் என்று பக்குவமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன். நான் இப்போது ஒரு குக்கிங் சேனலை துவங்கி இருக்கிறேன். 8 வயதிலிருந்து சமையல் செய்து வருகிறேன். ரொம்ப பிடித்தமான ஒரு விஷயம் அதனால் தான் கவர்ச்சியை காட்டாமல் இனிமேல் இப்படியே மாறிவிடலாம் என்ற ஒரு முடிவை எடுத்து விட்டேன்.
ஆனால், இப்போதும் என்னை சிலர் விடாமல் அப்படியெல்லாம் காட்ட மாட்டியா? நீ என்ன பத்தினியா மாறிட்டியா? சும்மா பத்தினி வேஷம் போடாதே என்றும் கமெண்ட் செய்கிறார்கள். கவர்ச்சியா வீடியோ போட்டாலும் திட்டுறாங்க, சமையல் வீடியோ போட்டலாலும் திட்டுறாங்க என்று இலக்கிய மிகுந்த வேதனையுடன் ஷகிலாவிடம் பகிர்ந்துள்ளார்.