ஆப்பிள் நிறுவன CEO உடன் சித்தார்த் – அதிதி ராவ்!! திருமணத்திற்கு அழைப்பா?

Author:
10 September 2024, 4:06 pm

நடிகர் சித்தார்த் 45 வயதாகியும் இளம் ஹீரோவை போன்றே ஸ்லிம் பிட் தோற்றத்தில் இருந்து வருகிறார். தொடர்ச்சியாக பல வெற்றி திரைப்படங்களில் நடித்தது வருகிறார். இவர் முதன் முதலில் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

siddharth aditi rao

அதுமட்டுமில்லாமல் அதே படத்தில் இவர் உதவி இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார். மேலும் பின்னணி பாடகர், திரைப்பட எழுத்தாளர் ,இப்படி பல திறமைகளை தன்னைக்குள் வைத்திருக்கும் நடிகர் சித்தார்த் தமிழ் , பாலிவுட், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து இந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டு வருகிறார் .

தமிழில் இவர் நடிப்பில் வெளிவந்த காதலில் சொதப்புவது எப்படி?, தீயா வேலை செய்யணும் குமாரு, ஜிகர்தண்டா, காவிய தலைவன் ,அவள் உள்ளிட்ட சில திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பின்னணி பாடகராக பாடல் பாடியிருக்கிறார்.

siddharth aditi rao Apple

இதனிடையே மகாசமுத்திரம் திரைப்படத்தில் நடித்த போது அப்படத்தின் ஹீரோயினாக நடித்த அதிதியுடன் காதல் வயப்பட்ட நடிகர் சித்தார் சில ஆண்டுகள் ரகசியமாக டேட்டிங் செய்து வந்தார். பின்னர் இருவரும் யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக திருப்பதியில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் தற்ப்போது அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் நடைபெற்ற ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் அறிமுக நிகழ்வில் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் ஹைதாரி ஜோடியாக கலந்துக்கொண்டு ஆப்பிள் நிறுவனத்தின் CEO Tim Cook உடன் எடுத்துக்கொண்ட போட்டோக்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

siddharth aditi rao CEO Tim Cook

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் அவரை உங்கள் திருமணத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறீர்களா? என கேள்வி எழுப்பி வருகிறார்கள். விரைவில் சித்தார்த் அதிதியை கரம்பிடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…