மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 23ம் தேதி வெளியான திரைப்படம் தான் வாழை. முன்னதாக மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்கள் மூலம் வாழ்க்கையின் வலிகளையும் வேதனைகளையும் எதார்த்தத்தையும் வெளிப்படுத்தி தமிழ்த்திரையுலகில் சிறந்த படைப்பாளியாக பெயரெடுத்தார்.
கடைசியாக அவரது இயக்கத்தில் வெளிவந்து தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் “வாழை”.இந்த திரைப்படம் மாரி செல்வராஜ் தனது சிறு வயது வாழ்க்கையை மையப்படுத்தி…வலிகளையும் வேதனைகளையும் உள்ளடக்கி எடுத்து இருக்கிறார். இந்த திரைப்படத்தை பார்த்த எல்லோருமே கண் கலங்கி மன வேதனைடன் ரிவியூ கொடுத்ததை நம்மால் பார்க்க முடிகிறது
இப்படி வசூல் ரீதியாகும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்று இருக்கும் வாழை திரைப்படம் தற்போது மிகப்பெரிய சர்ச்சை ஒன்றில் சிக்கிருக்கிறது. ஆம் பிரபல எழுத்தாளர் சாரு நிவேதிதா தாய்லாந்தில் லைவ் ஷோ ஒன்றில் வாழை படத்தை குறித்து மிகவும் கொச்சையாக பேசியிருகிறார்.
அவர் பேசியதாவது, ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்வார்கள். அதனை பலரும் கண்டு களிப்பார்கள். அப்படித்தான் வாழை படத்தில் வரும் டீச்சர் பூங்கொடி மாணவன் சிவனைந்தான் சம்பந்தப்பட்ட காட்சிகள் இருக்கிறது. எனவே இது ஒரு ஆபாசம் படம் போல் இருப்பதாக அவர் பகிரங்கமாக தன்னுடைய விமர்சனத்தை வைத்திருக்கிறார். அவரின் இந்த பேச்சு சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.