வகுப்பறையில் கள்ளிப்பால் குடித்த பள்ளி மாணவர்கள்… பதறிய ஆசிரியர் : அரியலூரில் அதிர்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
10 September 2024, 6:29 pm

அரியலூர் மாவட்டம் குனமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ளது அரசு தொடக்கப்பள்ளி. இப்பள்ளியில் 84 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்தவர்கள் நான்கு பேரும் ஐந்தாம் வகுப்பு படித்த ஒரு மாணவரும் கள்ளிப்பால் சுவைத்து பார்த்துள்ளனர்.

பணியில் இருந்த இல்லம் தேடி கல்வி ஆசிரியரிடம் மாணவர்கள் கள்ளிப்பால் சுவைத்ததை கூறியுள்ளனர்.

இதனை அடுத்து ஆசிரியர் உடனடியாக குணமங்கலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று முதல் உதவி அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து 108 அவசர ஊர்தி மூலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க: ஒரே பைக்கில் வந்த 3 பேர் பள்ளத்தில் விழுந்த சோகம்… பாதாள சாக்கடை பணியால் நிகழ்ந்த பரிதாபம்! (வீடியோ)

மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் தொடர்ந்து மருத்துவர் கண்காணிப்பில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 349

    0

    0