தமிழ் சினிமாவில் பிரபல நட்சத்திர நடிகராக பார்க்கப்பட்டு வருபவர் தான் நடிகர் ஜெயம் ரவி. இவர் ஜெயம் திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமாகி தொடர்ச்சியாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து இன்று முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பிடித்து வைத்திருக்கிறார் .
இதனிடையே பிரபல தயாரிப்பாளரான சுஜாதாவின் மகள் ஆர்த்தி என்பவரை ஜெயம் ரவி காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரவ் , அயான் என இரண்டு பிள்ளைகள் இருக்கும் சமயத்தில் கடந்த சில நாட்களாக ஜெயம்ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப்போவதாக வதந்திகள் வெளியாகிக்கொண்டு இருந்தன.
ஆனால், இருவருமே இதை உறுதி செய்யாமல் மௌனம் காத்து வந்த நிலையில் நேற்று ஜெயம் ரவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் ஆர்த்தி விவாகரத்து பற்றி எதுவுமே பதிவிடவில்லை.
இந்நிலையில் தற்ப்போது இந்த விஷயத்தில் திடீர் திருப்பமாக ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி அவர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்திருக்கிறார். அதாவது, இந்த விவாகரத்து முடிவு குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்டது இல்லை.
முழுக்க முழுக்க ஜெயம் ரவியின் முடிவு ஆகும். என்னுடைய கவனத்திற்கு வராமலேயே அவருடைய இந்த விவாகரத்து குறித்த செய்தி வெளியாகியிருக்கிறது. மனம் விட்டு பேச முயற்சித்தும் கூட ஜெயம் ரவி எனக்கு வாய்ப்பு அளிக்கவில்லை என ஆர்த்தி ஆதங்கத்துடன் குற்றம் சாட்டி இருக்கிறார். இந்த விஷயம் தற்ப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.