கறிவேப்பிலை தண்ணீர்: இத தினமும் குடிச்சா போதும்… தலைமுடி உதிர்வு பற்றி மறந்துடுங்க!!!

Author: Hemalatha Ramkumar
11 September 2024, 10:51 am

கிட்டத்தட்ட எல்லா உணவுகளுக்கும் இறுதியாக நாம் கறிவேப்பிலை சேர்த்து தாளிப்பது வழக்கம். இது உணவுக்கு வாசனை மற்றும் ஃப்ளேவர் சேர்ப்பதற்கு மட்டுமல்லாமல் அதில் உள்ள பல்வேறு நன்மைகள் காரணமாக பயன்படுத்தப்படுகிறது. அவ்வாறு தாளிப்பதற்கு சேர்க்கப்படும் கறிவேப்பிலையை பெரும்பாலான நபர்கள் ஒதுக்கி வைப்பதுண்டு. ஆனால் கறிவேப்பிலையில் உள்ள நன்மைகள் பற்றி தெரிந்தால் இனியும் அப்படி செய்ய மாட்டீர்கள். எனவே இந்த பதிவில் கொதிக்க வைத்த கறிவேப்பிலை தண்ணீரை பருகுவதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம். 

செரிமான ஆரோக்கியம்

கறிவேப்பிலை தண்ணீரில் ஆன்டி ஆக்சிடன்டுகள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை ஊக்குவித்து, நோய் எதிர்ப்பு அமைப்பை வலுவாக்கி, செரிமானத்தை ஊக்குவிக்கிறது. 

தலைமுடி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

கறிவேப்பிலை உங்களுடைய தலைமுடிக்கு ஒரு டானிக்காக செயல்படுகிறது. இது தலைமுடியை வலுவாக்கி இளநரை ஏற்படுவதை தவிர்க்க உதவுகிறது. அது மட்டுமல்லாமல் தலைமுடி வளர்ச்சியை ஊக்குவித்து, மயிர் கால்களுக்கு தேவையான போஷாக்கை அளிக்கிறது. 

ஆரோக்கியமான செரிமான அமைப்பை பராமரிக்கிறது 

அஜீரணம், நெஞ்செரிச்சல் ஆசிட் ரிஃப்ளக்ஸ் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் கருவேப்பிலை தண்ணீர் பருகி வர கூடிய விரைவில் நிவாரணம் பெறலாம். 

மன அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது கறிவேப்பிலையில் ஆற்றக்கூடிய மூலிகை வாசனை இருப்பதால் இது உடலில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. கறிவேப்பிலை தண்ணீர் காலையில் பருகுவது உங்களுடைய தசைகளை ரிலாக்ஸ் செய்து, அமைதியை ஊக்குவித்து அதன் மூலமாக மன அழுத்தத்தை குறைக்கிறது. இப்போது கறிவேப்பிலை தண்ணீர் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். 

முதலில் ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலையை நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள். இதனை இரண்டு டம்ளர் தண்ணீரில் சேர்த்து அது நன்றாக கொதிக்க விடவும். தண்ணீர் பாதியானதும் அதனை வடிகட்டி காலையில் பருகுங்கள். தேவைப்பட்டால் சுவைக்காக நீங்கள் ஒரு சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் புதினா இலைகளை சேர்க்கலாம். இந்த கொதிக்க வைத்த கறிவேப்பிலை இலை தண்ணீர் பல்வேறு ஆரோக்கிய நலன்களை அளித்தாலும் இதனால் ஒரு சில பக்க விளைவுகளும் ஏற்படலாம். இதனை அதிகப்படியாக சாப்பிடுவது ஒரு சில உடல்நல கோளாறுகளுக்கு வழிவகுக்கும். எனவே எந்த ஒரு உணவையும் உங்களுடைய அன்றாட வழக்கத்தில் சேர்ப்பதற்கு முன்பு மருத்துவரை அணுகுவது நல்லது.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…