மது அருந்திவிட்டு மயங்கிய மருத்துவர் : அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி.. நோயாளிகளிடம் தரக்குறைவான பேச்சு!

Author: Udayachandran RadhaKrishnan
11 September 2024, 1:19 pm

திருவள்ளூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரம்மாண்ட கட்டமைப்புகளுடன் அமைந்துள்ளது,

இந்த மருத்துவமனை சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு தற்பொழுது அனைத்து வசதிகள் கொண்ட மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது.

அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தில் இருந்தும் இங்கு வந்து மருத்துவம் பார்த்து செல்லும் சிறந்த மருத்துவமனையாக விளங்கி வரும் நிலையில், இம் மருத்துவ மனை சுமார் 500 படுக்கைகளுடன் கூடியது.

குறிப்பாக அவசர சிகிச்சை பிரிவு ஆண்களுக்கு தனி வார்டு பெண்களுக்கு தனி வார்டு என அதிநவீன மருத்துவ உபகரணங்களுடன் தற்பொழுது இயங்கி வரும் நிலையில்இந்த மருத்துவமனையில் போதிய மருத்துவர்களும் செவிலியர்களும் இல்லை என்ற குற்றச்சாட்டு பல மாதங்களாக தொடர்ந்து இருந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு பணியில் இருந்த பொதுமருத்துவர் நல்லதம்பி என்பவர், இ சி ஜி ஒரு நோயாளிக்கு எடுத்துவிட்டு, அந்த இசிஜியை வைத்து மற்றொரு நோயாளிக்கு சிகிச்சை பார்த்ததாக கூறப்படுகிறது.

இதனைக் கண்ட மற்ற நோயாளிகளும் நோயாளிகளுடன் வந்தவர்களும் மருத்துவரிடம் கேட்டபோது, மருத்துவர் அனைவரையும் தரக்குறைவாக ஒருமையில் பேசி அனைவரும் வெளியே செல்லும்படி அலப்பறையில் ஈடுபட்டதாகவும் நோயாளிகள் கூறப்படும் நிலையில் சந்தேகம் அடைந்த நோயாளிகள் மற்றும் அவர்களுடன் உறவினர்கள் அவர் குடித்துவிட்டு தன்னிலை மறந்து நோயாளிகளுக்கு சிகிச்சை சிகிச்சை பார்த்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் மருத்துவரிடம் நோயாளிகள் உங்களை நம்பி தானே வந்தோம் இப்படி குடித்துவிட்டு சிகிச்சை பார்க்கிறீர்களே உயிருக்கு ஏதாவது ஆனால் என்ன செய்வது என்று மருத்துவர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோவும் வெளியாகியுள்ளது.,

இதனை அடுத்து மருத்துவமனையில் இரவு காவல் பணியில் இருந்த காவலர்கள் மருத்துவரை மீட்டு அங்கிருந்து கொண்டு சென்றுள்ளனார் .

இது சம்பந்தப்பட்ட வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி திருவள்ளூர் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.,

மேலும் பொது மருத்துவர் நல்லதம்பி ஏற்கனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த நிலையில் அவரது மனைவி மேற்படிப்பிற்காக திருப்பதி சென்றதால் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பொது மருத்துவர் நல்லதம்பி மாறுதல் பெற்று வந்து சுமார் 40 நாட்களே பணிபுரிந்த நிலையில் தற்பொழுது சர்ச்சையில் சிக்கியுள்ளார்

எனவே திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகமும் உடனடியாக விசாரணை மேற்கொண்டு குறிப்பிட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க நோயாளிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்க முயற்சித்த போது அவர் மாவட்ட ஆட்சியருடன் மீட்டிங்கில் இருப்பதாக கூறி போன் காலை கட் செய்துள்ளார்.

மது அருந்திவிட்டு மருத்துவம் பார்த்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 341

    0

    0