அடிப்பாவி!! சண்டாளி பொதுமேடையில் பிரபல நடிகையை திட்டிய வெங்கட் பிரபு!

Author:
11 September 2024, 6:22 pm

தமிழ் சினிமாவில் தற்போதைய சென்சேஷனல் இயக்குனராக இருந்து வருபவர் தான் இயக்குனர் வெங்கட் பிரபு. இவர் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் கோட் இந்த திரைப்படத்தில் தளபதி விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க இவருடன் பிரசாந்த் ,மோகன் ,பிரபு தேவா ,சினேகா ,லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

Venkat Prabhu - Updatenews360

கிட்டத்தட்ட 300 கோடிக்கு மேல் இந்த திரைப்படம் வசூலிட்டி மாபெரும் சாதனை படைத்திருக்கிறது. இந்த நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷனில் பட குழுவினரோடு வெங்கட் பிரபு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கலந்து கொண்டார். அப்போது நடிகை சங்கீதா தொகுத்து வழங்கிய அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலகலகலப்பாக பேசினார் .

அதில் தலயா? தளபதியா? என்று நடிகை சங்கீதா வெங்கட் பிரபுவிடம் கேட்க…உடனே அவர் “அடிப்பாவி!! சண்டாளி… இதை சொல்லவே முடியாதே. எப்படி சொல்ல முடியும்? அப்பா பிடிக்குமா? அம்மா பிடிக்குமா? என்று கேட்பது போல் இருக்கிறது.

எனக்கு இருவருமே பிடிக்கும் நான் இருவரிடமும் வேலை செய்த போது இருவரையும் வைத்து ஒரு படத்தில் நடிக்க வைக்க நினைத்தேன் என்பது அவங்க ரெண்டு பேருக்குமே தெரியும். ஆனால் அது எப்படி எப்போது நடக்கும் என்பது தெரியாது என்று தெரிவித்திருந்தார். இந்த விஷயம் கூடிய சீக்கிரமே நடக்கட்டும் என சங்கீதா வெங்கட் பிரபுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

  • age gap between priyanka deshpande and her husband vj vasi இவ்வளவு வயசு வித்தியாசமா? விஜய் டிவி பிரியங்காவின் இரண்டாவது கணவர் இப்படிபட்டவரா?