தேனுடன் இந்த பொருளை கலந்து சாப்பிட்டால் உயிருக்கு உத்திரவாதம் இல்லையாம்!!!

Author: Hemalatha Ramkumar
12 September 2024, 6:57 pm

தேனீக்களிடமிருந்து கிடைக்கும் இயற்கையான இனிப்பு சுவை கொண்ட ஒரு திரவம் தேன் என்பதை நாம் அனைவரும் அறிவோம். உணவுகளுக்கு இனிப்பு சுவை சேர்ப்பதற்கு மட்டுமல்லாமல் காய்ச்சல் மற்றும் சளி போன்றவற்றில் இருந்து நிவாரணம் அளித்தல், ஆஸ்துமா பிரச்சனைக்கு தீர்வு போன்ற பல நன்மைகள் தேனில் அடங்கியுள்ளது. ஆனால் ஒரு சில பொருட்களை தேனில் கலந்து சாப்பிடுவது ஆபத்தில் முடிவடையலாம். அவ்வாறு நாம் செய்யக்கூடிய தவறு நம் உடல் நலத்திற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே தேனுடன் எந்தெந்த பொருட்களை கலந்து சாப்பிடக்கூடாது என்பதை நாம் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம். அதனை இந்த பதிவின் வாயிலாக பார்க்கலாம்.

தேனுடன் வெந்நீர்

தேனை வெந்நீரில் சேர்த்து குடித்தால் அது உங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். 140° யில் தேன் விஷத்தன்மையுடன் மாறுகிறது என்பது 2010 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தேனில் இயற்கை சர்க்கரைகள் இருப்பதால் அதனை சூடுப்படுத்தும் பொழுது அது 5-ஹைட்ராக்சிமெத்தில் ஃபார்ஃபரால் என்ற புற்றுநோய் ஏற்படுத்தும் பொருளை வெளியிடுகிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

தேனுடன் பூண்டு
தேனுடன் பூண்டை ஒருபோதும் கலந்து சாப்பிட வேண்டாம். இது செரிமான அசௌகரியத்தை ஏற்படுத்தும். பூண்டில் வலுவான நுண்ணுயிரிகளுக்கு எதிரான பண்புகள் இருப்பதால் அதனை தேனுடன் கலந்து சாப்பிடும் பொழுது அது நம்முடைய உடல் செயல்முறைகளை எதிர்மறையாக பாதிக்கிறது.

வெள்ளரிக்கையுடன் தேன்

சாலட்டில் ஒரு சிலர் தேன் கலந்து சாப்பிடுவதுண்டு. ஆனால் அந்த சாலட்டில் வெள்ளரிக்காய் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தேனோடு வெள்ளரிக்காய் சேர்த்து சாப்பிடுவது தவறு. வெள்ளரிக்காயில் குளிர்ச்சியூட்டும் பண்புகள் இருப்பதால் அது தேனுடன் சேரும்பொழுது சரும பிரச்சனைகள் அல்லது செரிமான கோளாறுகளை உண்டாக்கலாம்.

நெய்யுடன் தேன்
தேன் மற்றும் நெய் ஆகிய இரண்டும் நச்சுத்தன்மை கொண்ட ஒரு கலவை. 2020 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் எலிகளுக்கு தேன் மற்றும் நெய் சமமான விகிதத்தில் அளிக்கப்பட்டது. அது தலைமுடி இழப்பு, உடல் எடை இழப்பு மற்றும் காதுகளில் சிவத்தல் போன்ற பிரச்சனைகளை எலிகளில் ஏற்படுத்தியது.

இறைச்சி மற்றும் மீனுடன் தேன்
ஒருபோதும் மீன் மற்றும் இறைச்சி போன்ற அதிக புரதம் நிறைந்த பொருட்களோடு தேனை கலந்து சாப்பிட வேண்டாம். இது ஒரு வித்தியாசமான சுவையை உண்டாக்கும். மேலும் செரிமானம் மற்றும் வயிறு பிரச்சனைகளை உண்டாக்கும்.

இனிப்பான பழங்களுடன் தேன்
மாம்பழம் போன்ற அதிக இனிப்பு கொண்ட பழங்களுடன் தேன் சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். அன்னாசி பழம் மற்றும் மாம்பழம் போன்ற இனிப்பான பழங்களுடன் தேன் சேர்த்து சாப்பிடுவது சர்க்கரை அளவை மோசமான அளவில் அதிகரிக்கும். அதிலும் குறிப்பாக டயாபடீஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் ஒருபோதும் இந்த காம்பினேஷனை சாப்பிடக்கூடாது.

  • Keerthy Suresh viral photos in baby john movie கழுத்தில் தாலியுடன் மேடையில் கவர்ச்சி…சுண்டி இழுக்கும் கீர்த்தி சுரேஷ்…வைரலாகும் புகைப்படம்…!
  • Views: - 228

    0

    0