அன்னபூர்ணாவில் நான் ஜிலேபி சாப்பிட்டதே இல்லை.. சீனிவாசனை மிரட்டி மன்னிப்பு கேட்க சொன்னோமா? வானதி சீனிவாசன் விளக்கம்!

Author: Udayachandran RadhaKrishnan
13 September 2024, 2:25 pm

அன்னபூர்ணா உணவகத்தின் உரிமையாளர் சீனிவாசன், மத்திய நிதிaமைச்சரிடம் மன்னிப்பு கேட்ட விவகாரம் சர்ச்சையான நிலையில், பா.ஜ.க. எம்.எல்ஏ. வானதி சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அன்னபூர்ணா ஓட்டலுக்கு சென்று நான் ஜிலேபி சாப்பிட்டு பிரச்சனை செய்ததாக சீனிவாசன் கூறினார்.

நான் இதுவரை அன்னபூர்ணா ஓட்டலில் ஜிலேபி சாப்பிட்டதோ, பிரச்சனையில் ஈடுபட்டதோ இல்லை. மறுநாள் காலையில் இருந்து அவர் (சீனிவாசன்) எனக்கு தொடர்ச்சியாக போன் செய்தார். நான் தப்பாக பேசிவிட்டேன். நிதியமைச்சரிடம் மன்னிப்பு கேட்பதற்கு நேரம் கொடுங்கள் என்று கேட்டார்.

மேலும் படிக்க: பெண்ணிடம் இருந்த பணப்பையை துணிகரமாக கொளையடித்த பெண்கள்.. விரட்டி புரட்டியெடுத்த சிங்கப்பெண்..(வீடியோ)!

ஓட்டலுக்கு வந்த சீனிவாசன், நான் பேசியது தவறு, தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிட்டேன். உங்கள் மனது புண்பட்டிருந்தால் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என அவர் தாமாக முன் வந்து மன்னிப்புக்கேட்டார்.

தான் பேசியதை இணையத்தில் வேறுமாதிரி பரவிடுச்சி. நான் ஆர்.எஸ்.எஸ். சார்ந்தவர் என்று சொல்லி குடும்பத்தை பற்றி எல்லாம் பேசினார் என தெரிவித்த வானதி சீனிவாசன், பாஜக மன்னிப்பு கேட்க சொல்லி மிரட்டல் கொடுக்கவில்லை, அந்த அவசியமும் இல்லை என கூறினார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்