விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி மிகப்பெரிய அளவில் பேமஸான நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி கிட்டத்தட்ட 7 சீசன்கள் முடிவடைந்து விட்டது. 7 சீசன்களில் கலந்துக்கொண்ட பல பிரபலங்கள் தங்களுக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு தற்போது திரைப்படத்துறையில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள்.
எத்தனையோ திறமைசாலிகளை முகம் அறிய செய்து பிரபலம் ஆக்கிய பெருமை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சேரும். இந்த நிகழ்ச்சியை முதல் சீசனில் இருந்து கடைசி வரை நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கினார்.
ஆனால் சமீபத்தில் இனிமேல் நான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவதில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு அதிலிருந்து விலகினார் .
அதையடுத்து பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகர் விஜய் சேதுபதியை ஒப்பந்தம் செய்தார்கள். அவருக்கு சம்பளமாக ரூபாய் 50 கோடி கொடுக்கப்பட்டதாக கூட செய்திகள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் தற்போது பிக் பாஸ் 8 சீசன் குறித்தும் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கப் போவது குறித்தும் பிரபல நடிகையும் பிக் பாஸ் பிரபலமும் ஆன விசித்ரா பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார் .
அவர் பேசியதாவது, விஜய் சேதுபதி ஒரு சிறந்த தொகுப்பாளராக பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் நடந்து கொள்வார் என நான் எதிர்பார்க்கிறேன். முன்பு தொகுப்பாளராக இருந்த நடிகர் கமல்ஹாசன் செட்டிற்கு வந்தாலே எல்லோருமே பயப்படுவாங்க. அதேபோல ஒரு தோற்றத்தை விஜய் சேதுபதியும் கொடுக்கணும் அப்படின்னு நான் நினைக்கிறேன்.
இதையும் படியுங்கள்: செம மாஸா இருக்கே…. புதிய கார் வாங்கிய தல அஜித் – எத்தனை கோடி தெரியுமா?
அவர் தன்னுடைய மெண்டல் ஹெல்த்தை சிறப்பாக பராமரிக்க வேண்டும் அதுதான் இந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய முக்கியமான விஷயம். விஜய் மேலும் விஜய் சேதுபதியுடன் இணைந்து படத்தில் நடிக்கும் வாய்ப்பு தான் எனக்கு கிடைக்கவில்லை. அட்லீஸ்ட் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பாவது கிடைத்தால் நான் மிகுந்த உற்சாகமாக கலந்து கொள்வேன். கமல்ஹாசனை போலே இந்த சீசனையும் விஜய் சேதுபதி மிகச் சிறப்பாக நடத்துவார் என நம்புகிறேன் என விசித்ரா அந்த பேட்டியில் கூறி இருந்தார்.