மழைக்காலத்தில் இப்படி கூட ஆபத்து வருமா… தக்காளி வெட்டும் போது கவனமா இருங்க!!!

Author: Hemalatha Ramkumar
14 September 2024, 10:52 am

மழைக்காலம் வந்துவிட்டாலே நமக்கு குஷி தான். மழையை ரசித்தபடி சூடான ஒரு கப் காபி அல்லது டீ குடிப்பது ஒரு அற்புதமான அனுபவம். ஆனால் இந்த மழை காலத்தில் கூடவே பல்வேறு பிரச்சனைகளும் வந்து விடுகிறது. டெங்கு, சிக்குன்குனியா மற்றும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய் தொற்றுகள் மழைக்காலத்தில் மிக எளிதாக பரவிவிடும். ஆனால் பிரச்சனை இதோடு முடிவதில்லை. மழைக்காலத்தில் தக்காளிகள் போன்ற காய்கறிகளிலும் கிருமிகள் பரவுகின்றன.

சமீபத்தில் யுவான் கண்ணா என்ற இன்ஸ்டாகிராம் யூசர் தன்னுடைய அனுபவம் ஒன்றை பகிர்ந்து கொண்டார். அவருடைய பதிவில் தக்காளிகளில் சிறிய வெள்ளை நிற புழுக்கள் இருப்பதாகவும், எனவே தக்காளிகளை வெட்டும் பொழுது கவனமாக இருக்கும்படி அவர் எச்சரித்துள்ளார். காற்றில் உள்ள அதிகப்படியான ஈரப்பதம் காரணமாக மழைக்காலத்தில் தக்காளிகளில் புழுக்கள் உண்டாவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

மழைக்கால சூழலானது புழுக்கள் மற்றும் பூச்சிகள் வளர்வதற்கு தோதான ஒரு சூழலாக அமைகிறது. இதில் தக்காளி பழ புழுக்கள் தாவரங்களில் முட்டையிடும் மிகவும் பொதுவான ஒன்றாக அமைகிறது. இந்த புழுக்கள் தக்காளிகளில் நுழைந்து அவற்றில் உட்புற சேதத்தை ஏற்படுத்துகிறது. இதனால் தக்காளி கெட்டுப் போகிறது. புழுக்களால் சேதமடைந்த தக்காளிகளை சாப்பிடுவதால் நமக்கு பல்வேறு உடல் நலக் கோளாறுகள் ஏற்படலாம்.

தக்காளிகளை வாங்கும் பொழுது அவற்றில் வெளிப்புறமாக உள்ள அழுக்கு மற்றும் கெமிக்கல்களை அகற்றுவதற்கு சுத்தமாக நாம் கழுவ வேண்டும். ஆனால் உட்புறமாக அமைந்துள்ள சேதத்தை நாம் ஒரு சில சமயங்களில் கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறோம். ஒருவேளை அந்த மாதிரி சேதமடைந்த தக்காளிகளை சாப்பிடும் பொழுது நமக்கு செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகிறது.

புழுக்களும் அவற்றின் கழிவுகளும் தீங்கு விளைவிக்கும். பாக்டீரியாக்கள் அல்லது தக்காளிகளில் சிறிய ஓட்டைகள் அல்லது கருப்பு நிற புள்ளிகள் இருக்கிறதா என்பதை கவனியுங்கள். தக்காளிகளை வாங்கியதும் அவற்றை நன்றாக கழுவி தோலை நீக்கி அதன் பிறகு அவற்றை சமைப்பது தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்களால் ஏற்படும் அபாயங்களை குறைக்க உதவும்.

கூடுதலாக தக்காளிகளை நம்பகமான மூலங்களிலிருந்து வாங்கி அவற்றை சரியான முறையில் சேகரித்து வைப்பது அவற்றில் புழுக்கள் மற்றும் பூச்சிகள் நுழைவதை தவிர்க்க உதவும். இந்த பழக்கங்களை பின்பற்றுவது மழைக்காலத்திலும் கூட உங்களுடைய உணவை ஆரோக்கியமாகவும் போஷாக்கு நிறைந்ததாகவும் மாற்றும் நச்சுக்களை ஏற்படுத்தலாம். இது உணவு சார் நோய்கள் அல்லது குடல் தொற்றுகளை ஏற்படுத்தும். எனவே மழைக்காலத்தில் பாதுகாப்பாக உணவு சாப்பிடுவதை உறுதிப்படுத்த தக்காளிகளை வெட்டும் பொழுது மிகவும் கவனமாக செயல்ப செயல்பட வேண்டும்.

  • nayanthara Happy children’s day…. குழந்தைகளுடன் கொண்டாடிய விக்கி – நயன் தம்பதி – கியூட் கிளிக்ஸ் வைரல்!
  • Views: - 172

    0

    0